||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
005. திரு அன்பில் (திருச்சி)
ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 1 பாசுரம்
1. திருமழிசையாழ்வார் - 1 பாசுரம்
1. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
போற்றி செய வோர் குடைக் கீழ்ப் பொன்னாடும் இந்நாடும்
நால் திசையும் ஆண்டாலும் நன்கு இல்லை தோற்றம் இலா
எந்தை அன்பில் ஆதி இணைத் தாமரை அடிக்கே
சிந்தை அன்பிலாதார் சிலர்
- தோற்றம் இலா எந்தை - பிறப்பில்லாத எமது தந்தையும்
- அன்பில் ஆதி - திருவன்பில் என்னும் திருப்பதியில் எழுந்தருளி இருக்கின்ற முழுமுதற் கடவுளுமான எம்பெருமானது
- இணை தாமரை அடிக்கு - இரண்டு திருவடித் தாமரைகளினிடத்தில்
- சிந்தை அன்பு இலாதார் சிலர் - தமது மனத்தில் பக்தியைக் கொள்ளாதவராகிய சில பேர்
- போற்றி செய - யாவரும் தமக்கு வாழ்த்துக் கூற
- ஓர் குடை கீழ் - ஒற்றை வெண் கொற்றக் குடையின் நிழலிலே
- பொன் நாடும் - பொன்னுலகமாகிய தேவ லோகத்தையும்
- நால்திசையும் இ நாடும் - நான்கு திக்கின் எல்லை வரையிலும் உள்ள இம்மண்ணுலகத்தையும்
- ஆண்டாலும் - தனி அரசாட்சி செய்தாலும்
- நன்கு இல்லை - அதனால் அவர்க்கு யாதொரு நன்மையும் உண்டாகாது
---------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 1
திருமழிசையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 2417 - பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
நான்முகன் திருவந்தாதி - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36)
நாகத்து அணைக் குடந்தை* வெஃகா திரு எவ்வுள்*
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில்*
நாகத்து அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான்| (2)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment