||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
சுதாமரின் ஆச்சர்யம்|
கிருஷ்ணர் முதல் பிடி அவல் சாப்பிட்டதுமே உலகத்தின் செல்வம் முழுவதையும் அவர் சுதாமருக்கு வழங்கி விட்டார். இரண்டாம் பிடி அவல் சாப்பிட்டால், ருக்மிணியே பக்தன் வீட்டுக்குப் போய்ப் பணிவிடை செய்ய வேண்டியிருக்கும். அந்தத் தர்ம சங்கடமான நிலையைத் தடுப்பதற்காகத் தான் அவள் இரண்டாம் பிடி அவலைக் கிருஷ்ணர் சாப்பிடாமல் தடுத்தாள். மறுநாள் காலை, கிருஷ்ணரிடம் விடைப்பெற்று கொண்டு, அவர் தமது வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். கிருஷ்ணர் அவரோடு சிறிது தூரம் சென்று விடை கொடுத்தனுப்பினார்.
செல்வம் வேண்டும் என்று சுதாமர் கிருஷ்ணரை ஒரு பொழுதும் வேண்டியதில்லை. இந்த அற்பப் பொருளை நாடி அவரிடம் சென்றோமே என்று வெட்கப்பட்டார். ஆனால் கிருஷ்ணரைத் தரிசித்ததில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
"கிருஷ்ணர் எத்தனை அன்புள்ளம் கொண்டவர் என்பதை இன்று நான் பார்த்தேன். கிழிந்த அழுக்கான உடைகளை அணிந்துள்ள இந்த ஏழையை அவர் அன்பாக தழுவிக் கொண்டார். நானோ அற்பனுக்கும் அர்ப்பன். அவரோ தேவர்களுக்கெல்லாம் தேவர்! இருந்தும் என்னைத் தழுவிக் கொண்டாரே! அவருடைய எல்லையற்ற அன்புதான் என்னே!" என்று நினைத்துக் கொண்டே சுதாமர் வீடு திரும்பினார்.
என்ன ஆச்சரியம்! பணம் வேண்டுமென்று சுதாமர் கிருஷ்ணரைக் கேட்கவேயில்லை, இருந்தும் அவருடைய பழைய குச்சுவீடு இருந்த இடத்தில ஒரு பெரிய மாளிகை இருந்தது! அவரால் தம் கண்களை நம்ப முடியவில்லை. எங்கோ பார்த்தாலும் நந்தவனங்களும் பூங்காக்களும் இருந்தன. "என்ன இது! இது எந்த இடம்! என்னுடைய பழைய குடிசை எங்கே?" என்று கேட்டார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment