About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 83 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 83 - சிங்கமதாகிய பேய் முலை உண்டவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

அளந்திட்ட தூணை* அவன் தட்ட* 
ஆங்கே வளர்ந்திட்டு* வாளுகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்* ஒண் மார்வகலம்* 
பிளந்திட்ட கைகளால் சப்பாணி* 
பேய் முலை உண்டானே! சப்பாணி|

  • அளந்திட்ட - தானே அளந்து கட்டின
  • தூணை - கம்பத்தை
  • அவன் - அந்த ஹிரண்யாஸுரனே
  • தட்ட - சீறி உதைக்க
  • ஆங்கே - அவன் புடைத்த அந்த இடத்திலேயே
  • வாள் உகிர் - கூர்மையான நகங்களை உடைய
  • சிங்கம் உரு ஆய் - நரஸிம்ஹ மூர்த்தியாய்
  • வளர்ந்திட்டு - வளர்ந்த வடிவத்துடன் தோன்றி
  • உளம் - ஒரு வேளை அந்த இரண்யாஸுரன்  அனுகூலனாகக் கூடுவானோ என்று அவன் மனதை 
  • தொட்டு - பரிசோதித்துப் பார்த்து பின்பு
  • இரணியன் - அந்த இரண்யாஸுரனுடைய
  • ஒளி - ஒளி பொருந்திய
  • மார்பு அகலம் - அகன்ற மார்பை
  • பிளந்திட்ட - நகத்தாற் பிளந்த கைகளால் 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • பேய் -  பூதனையின்
  • முலை - விஷப் பாலை
  • உண்டானே - உண்டவனே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

பகவான் இருக்கிறானா என பரிசோதிப்பதின் பொருட்டு, ஹிரண்யாசுரன் அவன் கட்டின தூணையே தகர்க்க, அத்தூணில் இருந்து பெரிய வடிவாய் கூரிய நகங்களுடன் சிங்க வடிவில் திருவவதரித்து, அவன் மனம் ஒரு வேளை மாறுமோ என நிதானித்து, அப்படி மாறாததால், ஒளி பொருந்திய அவனுடைய அகன்ற மார்பை கிழித்த கைகளால் சப்பாணி கொட்டவும்! பூதனையின் விஷப்பாலை சுவைத்தவனே! சப்பாணி கொட்டவும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment