About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 104

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 74

மநோ ஜவஸ் தீர்த்த² கரோ 
வஸு ரேதா வஸு ப்ரத³:|
வஸு ப்ரதோ³ வாஸு தே³வோ 
வஸுர் வஸுமநா ஹவி:||

  • 695. மநோ ஜவஸ் - மனோபாவத்தில் செயல்படுபவர். சிந்தனையில் வேகமானவர்.
  • 696. தீர்த்த² கரோ - தூய்மைப் படுத்துபவர். புனித நீரின் ஆதாரம். ஸம்சாரப் பெருங்கடலைக் கடக்க உதவுகிறார். அவருடைய கரத்தின் ஸ்பரிசமே தூய்மையாக்கும். 
  • 697. வஸு ரேதா - ஒளியையே கருவாகப் பெற்றிருப்பவர். 
  • 698. வஸு ப்ரத³ஹ - நிதியாக உள்ள தன்னையே தருபவர். பெருமை, கண்ணியம் கொடுப்பவர். எல்லா உயிர்களுக்கும் இருப்பிடம் தருபவர்.
  • 699. வஸு ப்ரதோ³ - பெருமதிப்பை அளிப்பவர். மோக்ஷம் அளிப்பவர். 
  • 700. வாஸு தே³வோ - வசுதேவருடைய மகன். வியாபித்து விளையாடுபவர். நன்கு அறியப்பட்ட 12 எழுத்துக்கள் கொண்ட வாசு தேவா மந்திரத்தின் அதிபதி. பக்தர்களால் போற்றப்படுபவர். எல்லாவற்றிலும் வாழ்பவர், அவர்களைச் சுற்றிச் செல்ல வைப்பவர்.

ஏழாம் நூறு திரு நாமங்கள் நிறைவு

  • 701. வஸுர் - வசிப்பவர். தேடப்படும் சிறந்த செல்வம். பாற்கடலில் வசிப்பவர். வசுவின் வடிவில் இருப்பவர். எல்லாவற்றிலும் வாழ்பவர். பக்தி இல்லாதவர்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்பவர். அனைவருக்கும் இறுதி வாசஸ்தலம்.
  • 702. வஸுமநா - வசுதேவரிடத்தில் மனம் வைத்தவர். பொன் மனம் கொண்டவர். தூய்மையானவர். தூய்மையான மனம் உடையவர். துன்பங்கள் இல்லாதவர். அனைத்தும் வேறுபாடு இன்றி வசிப்பவர். தன் பக்தர்களிடம் வாத்சல்யம் (பாசம்) நிறைந்த மனம் கொண்டவர். தன் பக்தர்களின் இடையூறுகளை நீக்கும் மனம் கொண்டவர். எல்லா உயிர்களின் தேவைகளையும் முழுமையாக அறிந்தவர். 
  • 703. ஹவிஹி - பெற்றுக் கொள்ளப்பட்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment