About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

108 திவ்ய தேசங்கள் - 023 - திருதேரழுந்தூர் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

023. திருதேரழுந்தூர் 
திருவழுந்தூர் - மாயவரம் 
இருபத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 45 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 45 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 41 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் – 1588 - 1597 - ஏழாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1597 - 1607 - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1608 - 1617 - ஏழாம் பத்து - ஏழாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1618 - 1627 - ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 1854 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்

திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் – 2066 - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (15)
  • திவ்ய ப்ரபந்தம் – 2077 - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (26)

சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (34)

பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2777 - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (65)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

அடியாராய் வாழ்மின் அறிவு இலாப் பேய்காள்
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் முடிவில்
செழுந்தூரத் தன் எனினும் செங்கண் மால் எங்கள்
அழுந்தூர் அத்தன் அணியன் ஆம்

  • அறிவு இலா பேய்காள் - புத்தி இல்லாமையால் பேய் போன்றிருப்பவர்களே! 
  • அடியார் ஆய் வாழ்மின் - நீங்கள் எம்பெருமானுக்குத் தொண்டர்களாய் நல்வாழ்ச்சியை அடையுங்கள். அவ்வாறு செய்தால்
  • செடி ஆர் வினை அனைத்தும் தீரும் - செடி போல அடர்ந்துள்ள உங்களது தீவினைகள் யாவும் ஒழியும்
  • செம் கண் மால் - சிவந்த திருக்கண்களை உடைய திருமாலும்
  • அழுந்தூர் எங்கள் அத்தன் - திருவழுந்தூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளிய எங்கள் ஸ்வாமியுமாகிய எம்பெருமான்
  • செழுந் தூரத்தன் எனினும் - சாதாரணமான நிலையில் மிக்க தூரத்தில் இருப்பவன் போலத் தோன்றினாலும்
  • முடிவில் - அந்திம காலத்தில்
  • அணியன் ஆம் - சமீபத்தில் வந்து காட்சி தந்து உங்களுக்கு நற்கதியை அளிப்பவனாவன்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment