||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 82 - சக்கர கையனே! சப்பாணி கொட்டு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
குரக்கினத்தாலே* குரை கடல் தன்னை*
நெருக்கி அணை கட்டி* நீள் நீர் இலங்கை*
அரக்கரவிய* அடு கணையாலே*
நெருக்கிய கைகளால் சப்பாணி*
நேமியங் கையனே! சப்பாணி|
- குரை - கோஷத்தோடு (பெரும் ஒலியோடு)
- கடல் தன்னை - ஸமுத்ரத்தை
- நெருக்கி - இரண்டு பக்கத்திலும் தேங்கும்படி செய்து
- குரங்கு - குரங்குகளினுடைய
- இனத்தாலே - கூட்டங்களைக் கொண்டு
- அணை கட்டி - ஸேது அணையை கட்டி முடித்து
- நீள் நீர் - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
- இலங்கை - இலங்கையிலுள்ள
- அரக்கர் - ராக்ஷஸர்களெல்லாம்
- அவிய - அழிந்து போகும்படி
- அடு - அழிக்கும் திறனுயுடைய
- கணையாலே - அம்புகளைக் கொண்டு
- நெருக்கிய - போர் செய்த கைகளால்
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
- நேமி - திருவாழி ஆழ்வானை
- அம் கையனே - அழகிய கையிலேந்தினவனே!
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
அலை மோதிய கடலை அடங்க வைத்து, வானர சேனையைக் கொண்டு இலங்கை வரை நீண்ட பாலம் அமைத்து, கடலால் சூழப்பட்ட இலங்கையை அடைந்து அங்குள்ள ராக்ஷஸர்களுடன் சரமாரியாக அம்புகளை எய்து கடுமையாகப் போர் செய்து அவர்களை அழித்த அந்த ஸாகஸக் கைகளாலே சப்பாணி கொட்ட வேண்டும். சக்ராயுதம் ஏந்திய திருக் கைகளாலே சப்பாணி கொட்ட வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment