About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 94

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுதாமரின் தர்ம சங்கடம்|

கடைசியில் கிருஷ்ணர், "என்ன நண்பா, எனக்கு என்ன கொண்டு வந்து இருக்கிறாய்?" என்று கேட்டார். சுதாமரின் தலை குனிந்தது, தாம் கொண்டு வந்து இருந்த அவலைக் காண்பிக்க அவருக்கு வெட்கம். அத்தனை அற்புதமான பொருளைக் கிருஷ்ணருக்குக் கொடுக்க அவருக்கு அவமானமாக இருந்தது.


ஆனால் கிருஷ்ணர் அவரை விடவில்லை. "நீ ஏதோ சாதாரணப் பொருளைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அது தான் யோசனை செய்கிறாய், ஆனால் என் பக்தன் அன்போடு ஒரு சிறிய பொருளைக் கொடுத்தாலும் அதை நான் பெரிதாகக் கருதுவேன். பக்தி இல்லாமல் கொடுக்கப்படும் பொருள், அது எத்தனை பெரியதாக இருந்தாலும் சரி, அது எனக்கு இன்பத்தைத் தருவது இல்லை. எனக்கு அன்போடு அளிக்கப்படும் பொருள், அது இலையாக இருந்தாலும் சரி, மலராக இருந்தாலும் சரி, ஏன் வெறும் தண்ணீராக இருந்தாலும் சரி, அதை நான் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். ஏனெனில், அது பக்தியும் அன்பும் உள்ளவர்களால் கொடுக்கப்படுகிறது" என்றார்.

ஆனால் கிருஷ்ணர் இப்படி பேசியும் சுதாமர் அசையாமல் பேசாமல் இருந்தார். உடனே கிருஷ்ணரே சுதாமர் அவலை முடித்து வைத்திருந்த துணியை எடுத்துத் திறந்தார். அதில் அவலைக் கண்டதும் அவர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். "ஓ நண்பனே! அவல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நீ கொண்டு வந்திருக்கிறாயே!" என்று ஒரு பிடி அவலை எடுத்துச் சாப்பிட்டார். இரண்டாம் பிடியை எடுத்து அதை வாய்க்குள் போட்டுக் கொள்ளப் போகையில் ருக்மிணி சிரித்துக் கொண்டே அவர் கையைப் பிடித்துக் கொண்டாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment