About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 February 2024

திவ்ய ப்ரபந்தம் - 84 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 84 - பாற்கடல் கடைந்த பரந்தாமன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

அடைந்திட்டு அமரர்கள்* ஆழ் கடல் தன்னை* 
மிடைந்திட்டு மந்தரம்* மத்தாக நாட்டி* 
வடம் சுற்றி* வாசுகி வன் கயிறாகக்* 
கடைந்திட்ட கைகளால் சப்பாணி* 
கார்முகில் வண்ணனே! சப்பாணி|

  • அமரர்கள் - துர்வாஸ முனிவரது சாபத்தினால் தாம் இழந்த ஐஸ்வர்யத்தைப் பெறுதற்காக, தேவர்கள்
  • அடைந்திட்டு - உன்னைச் சரண் அடைந்ததற்காக
  •  ஆழ்கடல் தன்னை - உன்னுடைய படுக்கும் இடம் என்றும் பாராமல், ஆழமான க்ஷிராப்தியை நீ 
  • விடைந்திட்டு - நெருங்கி
  • மந்தரம் - மந்தர பர்வதத்தை (மலையை)
  • மத்து ஆக - கடைவதற்குரிய மத்தாகும்படி
  • நாட்டி - நேராக நிறுத்தி
  • வாசுகி - வாசுகியென்னும் பாம்பினை
  • வன் வடம் - வலிய கயிறாக்கி அந்த மந்தர மலையாகிற மத்திலே
  • கயிறு ஆக சுற்றி - கடையும் கயிறாகச் சுற்றி 
  • கடைந்திட்ட - அமிர்தம் வரும் வரை கடைந்த
  • கைகளால் - திருக்கைகளால்
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும் 
  • கார்முகில் - கருத்த மேகம் (காளமேகம்)  போன்ற 
  • வண்ணனே! - நிறமுடையவனே! 
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

தேவர்கள் எம்பெருமானிடம் சரணமடைந்ததை உத்தேசித்து, ஆழமான க்ஷீராப்தி ஸாகரத்தை நெருங்கி, மந்தார மலையை மத்தாக எடுத்து நிறுத்தி, வாசுகியென்னும் பாம்பை கயிறாக மத்தில் (மலையில்) கட்டி, பாற்கடல் கடைந்த அத்திருக் கைகளால் சப்பாணி கொட்டவும் ! மேகம்போன்ற நிறமுடையவனே, சப்பாணி கொட்டவும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment