||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 4
ஸர்வ: ஸ²ர்வ: ஸி²வ ஸ்தா²ணுர்
பூ⁴தாதி³ர் நிதி⁴ ர் அவ்யய:|
ஸம்ப⁴வோ பா⁴வநோ ப⁴ர்த்தா
ப்ரப⁴வ: ப்ரபு⁴ர் ஈஸ்²வர:||
- 25. ஸர்வஸ்² - எல்லாமாயிருப்பவர். எங்கும் நிறைந்தவர். எல்லாவற்றுக்கும் காரணமானவர்.
- 26. ஸ²ர்வஸ்² - அழிப்பவர், தீமையை விலக்குபவர். மங்களத்தை அளிப்பவர். ஜலப்பிரளயத்தின் போது எல்லாவற்றையும் தனக்குள் அடக்குகிறார்.
- 27. ஸி²வ - தூய்மையானவர். களங்கமற்றவர். ஐஸ்வர்யத்தை அளிப்பவர். ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ ஆகிய மூன்று குணங்களிலிருந்து விடுபட்டவர்.
- 28. ஸ்தா²ணுர் - அடியார்களுக்கு அருள் புரிவதில் நிலையாய் இருப்பவர். நிலையானவர். மாறாதவர்.
- 29. பூ⁴தாதி³ர் - எல்லாவற்றாலும் விரும்பப் படுபவர், எல்லாவற்றையும் ஸரீரமாக உடையவர். எல்லா காரணங்களுக்கும் அவரே ஆதாரம்.
- 30. நிதி⁴ ர் அவ்யயய - குறைவற்ற நிதியாய் இருப்பவர். நித்யமானவர்.
- 31. ஸம்ப⁴வோ - தேவைப்படும் போதெல்லாம் தன் விருப்பப்படி அவதாரம் செய்பவர். தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக அவர் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறார்.
- 32. பா⁴வநோ - வாழ்விப்பவர். செயல்களின் பலனைத் தருபவர்.
- 33. ப⁴ர்த்தா - ஆதரிப்பவர், காப்பாற்றுபவர்.
- 34. ப்ரப⁴வஃ - சிறப்பாகத் தோன்றுபவர், தன்னிச்சையால் பிறப்பவர். அவரது அவதாரங்கள் மகத்துவத்தின் செயல்கள்.
- 35. ப்ரபு⁴ர் - ஸமர்த்தன். தனது மேன்மை சிறிதும் குன்றாதவர். மிகவும் சக்தி வாய்ந்தவர். எவருடைய உதவியும் இல்லாமல் தான் விரும்பியதைச் செய்யக் கூடியவர்.
- 36. ஈஸ்²வரஹ - ஆளுகின்ற ஈசன். அவர் உச்ச ஈஸ்வரன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment