About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 25 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 2

பூதாத்மா பரமாத்மா ச 
முக்தா நாம் பரமா க³தி:|
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ 
க்ஷேத்ரஜ்ஞோ அக்ஷர ஏவ ச||

  • 10. பூதாத்மா - தூய்மையான இயல்புடையவர். அவர் வசிக்கும் உடலின் (ஜீவாத்மா) செயல்களால் கறைபடாதவர்.
  • 11. பரமாத்மா ச - பரம புருஷர், மேலானவர். அறிபவராகவும், பார்ப்பவராகவும், பராமரிப்பவராகவும், அனுபவிப்பவராகவும், பரமாத்மாவாகவும் இருக்கும் இறுதி உணர்வு அவரே .
  • 12. முக்தா நாம் பரமா க³திஹி - முக்தி அடைந்தவர் அடையும் உயர்ந்த இடம். அவரது எண்ணங்களில் மூழ்கியவர்கள் பரமகதி அல்லது மோட்சத்தை அடைகிறார்கள்.
  • 13. அவ்யயஃ - அழியாதவர். எந்த விதமான மாற்றத்தையும், சிதைவையும், சீரழிவையும் அனுபவிக்காதவர்.
  • 14. புருஷஸ் - வேண்டியவற்றை எல்லாம் மிகுதியாகக் கொடுப்பவர். எல்லா உயிர்களிலும் வசிப்பவர். நம் உடல் ஒரு உறைவிடமாகக் கருதப்படுகிறது, அவர் அங்கு வசிக்கிறார்.
  • 15. ஸாக்ஷீ - தன்னை அனுபவித்து மகிழும் முக்தர்களைப் பார்த்து மகிழ்பவர். எல்லாவற்றையும் சாட்சியாகக் காண்பவர்.
  • 16. க்ஷேத்ரஜ்ஞோ - முக்தர்கள் தம்மை இடை விடாமல் அநுபவிப்பதற்குத் தக்க இடமான விபூதியை அறிந்தவர். பகவான் எல்லாம் அறிந்தவர், அனைத்தையும் சாக்ஷியாகவே பார்க்கிறார்.
  • 17. அக்ஷர ஏவ ச - அநுபவிக்க அநுபவிக்க மேலும் மேலும் பெருகும் இன்ப வெள்ளம் குறையாதவர். நித்யமானவர்.  அழிவில்லாதவர். அவர் தனது பக்தர்களை உச்ச ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்கிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment