||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கோகுலத்திலிருந்து பிருந்தாவனம்|
ஒரு தடவை நந்தகோபர் யாதவர்கள் எல்லோரையும் ஒன்று கூட்டினார். கிருஷ்ணனுடைய பாதுகாப்பைப் பற்றி பேசுவதற்காகத் தான் அந்தக் கூட்டம் கூடியது. நந்தகோபரும் மற்றப் பெரியவர்களும் கோகுலத்தில் நடக்கும் விபரீத செயல்களைக் கண்டு கவலை கொள்ளத் தொடங்கி இருந்தனர். அங்கு அடிக்கடி அரக்கர்கள் வருவதும், அவர்கள் மர்மமாகச் சாவதும் அவர்களுக்குக் கவலையை அளித்தன. மிகவும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர்களில் முதியவர் உபனந்தர் என்பவர் பின்வரும் யோசனையைக் கூறினார்.
“என் அருமை நண்பர்களே! நாளுக்கு நாள் இங்கே ஆபத்துக்கள் அதிகரித்து கொண்டு இருக்கின்றன. கடவுளின் அருளினால் தான் கிருஷ்ணன் இந்த ஆபத்துக்களில் இருந்து தப்பியுள்ளான். ஆபத்துக்கள் நீங்கி விட்டன என்று நிச்சியம் இல்லை. அதனால் நாம் வேறு இடத்திற்குக் குடி போவது நல்லது. கோவர்த்தன மலைக்கு அடியில் பிருந்தாவனம் என்று ஓர் அழகிய இடம் இருக்கிறது. மலையை சுற்றிய காடுகளில் நிறையப் புல் உள்ளது. அது நம் பசுக்களுக்கு உதுவும். நாம் அங்கே சென்று குடியேறினால் என்ன?" என்று கேட்டார்.
உபனந்தருக்கு அங்குள்ள எல்லோரும் மிகுந்த மரியாதை கொடுத்தார்கள் ஆதலால் நந்தகோபரும் மற்றக் கோபர்களும் அவருடைய யோசனையை வரவேற்றார்கள். தங்கள் வண்டிகளையும் பசுக்களையும் எடுத்துக் கொண்டு அடித்த நாளே பிருந்தாவனம் செல்வது என்று தீர்மானித்தார்கள். தங்களுடைய உடைமைகளை எல்லாம் அவர்கள் வண்டிகளில் ஏற்றினார்கள். பெண்களும், வயதான ஆண்களும், குழந்தைகளும் வண்டிகளில் ஏறினார்கள். இளைஞர்கள் வண்டிகளுக்குப் பாதுகாப்பாக நடந்து வந்தார்கள். ரோகிணி, யசோதை, கிருஷ்ணன், பலராமன் ஆகிய நால்வரும் ஒரு வண்டியில் ஏறிக் கொண்டார்கள். கோபர்கள் வாத்தியங்களை வாசித்துக் கொண்டு சென்றார்கள். எல்லோரும் புத்தாடை அணிந்திருந்தனர். ஏதோ ஒரு விழாவுக்குச் செல்வது போல அவர்கள் காணப்பட்டார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment