About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 25 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 3

யோகோ³ யோக³ விதா³ம் நேதா 
ப்ரதா⁴ந புருஷேஸ்²வர:|
நாரஸிம்ஹ வபு: ஸ்ரீ மாந் 
கேஸ²வ: புருஷோத்தம:||

  • 18. யோகோ³ - மோட்ச சாயுஜ்யத்துக்குத் தானே உபாயமாக இருப்பவர். யோகாவின் மூலம் அடையக் கூடியவர். யோகத்தால் இறைவனை அடைய முடியும்.
  • 19. யோக³ விதா³ம் நேதா - தன்னை உபாயமாகப் பற்றாதவர்களையும், வலியச் சென்று தானே வழிகாட்டுபவர். யோகத்தில் நிலைநிறுத்தப்பட்ட அனைவருக்கும் எஜமானர்.
  • 20. ப்ரதா⁴ந புருஷேஸ்² வரஹ - பிரக்ருதியையும், ஜீவாத்மாவையும் எல்லா வகையாலும் நியமித்து நடத்துபவர். பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் பிரதான புருஷேஸ்வரர்.
  • 21. நாரஸிம்ஹ வபுஸ் - பக்தனுடைய பயத்தைப் போக்க, மனிதனும் சிங்கமும் கலந்த தெய்வீக உருவத்தைப் எடுப்பவர்.
  • 22. ஸ்ரீ மாந் - அழகன். அழகினால் பக்தர்களை மகிழச் செய்து உலகத்தைக் காப்பவர். மார்பில் லட்சுமி தேவியுடன் சேர்ந்து மிகவும் அழகாக இருக்கிறார்.
  • 23. கேஸ²வஃ - உவமை கூற முடியாத கருமையும் மனமும் உடைய, கருங்குழலை உடையவர். கேஸி² என்ற அரக்கனைக் கொன்றவர்.
  • 24. புருஷோத்தமஹ - புருஷர்களுள் மிகவும் சிறந்தவர். முக்தியை அடைய நாம் எப்போதும் தியானிக்க வேண்டியவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment