||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.2
ஸூத உவாச!
யம் ப்ரவ் ரஜந்தம் அநுபேதம் அபேத க்ருத்யம்
த்³வை பாயநோ விரஹ காதர ஆஜு ஹாவ।
புத்ரேதி தந்மய தயா தரவோபி⁴ நேது³ஸ்
தம் ஸர்வ பூ⁴த ஹ்ருத³யம் முநி மாந தோஸ்மி॥
- ஸூத உவாச! - ஸூதர் சொல்கிறார்
- முநிம் - மஹரிஷியாக உள்ளவரும்
- அநுபேதம் - ஏகாகியாயும்
- அபேத க்ருத்யம் - எவ்வித வியாபாரமும் இல்லாதவரும்
- ப்ரவ் ரஜந்தம் - எல்லாவற்றையும் துறந்து செல்பவராயும் உள்ள
- யம் - எந்த சுகப் பிரம்மத்தை
- த்³வை பாயநோ - வியாஸ பகவான்
- விரஹ காதர - பிரிவாற்றாமையால் பயந்தவராய்
- புத்ரா இதி - ஹே குழந்தாய்! என்று
- ஆஜு ஹாவ - கூப்பிட்டாரோ
- தரவோ - மரங்களும்
- தந்மய தயா - சுக ரூபத்தை உடையவைகளாய்
- அபி⁴ நேது³ஸ் - எதிரொலி செய்தனவோ
- தம் - அப்படிப்பட்ட
- ஸர்வ பூ⁴த ஹ்ருத³யம் - எல்லா உயிர்களிலும் ஸம்பந்தப்பட்ட ஸூகரை
- ஆநதோ அஸ்மி - வழங்கியவனாய் இருக்கிறேன்
ஸூதர் கூறுகிறார்: ஒருவரோடும் சேராது தனித்து இருப்பவரும், எவ்விதச் செயலும் அற்றவராக (கர்மங்களை ஒழித்தவராக) விளங்குபவருமான ஸ்ரீசுகர், பற்றனைத்தையும் துறந்து செல்லும் போது, அவரது பிரிவாற்றாமைக்கு அஞ்சிய வியாச பகவான் குழந்தாய் என்று உரத்த குரலில் அழைத்தார். அப்போது மரங்களும் பிரும்மமயமாக ஆகிவிட்டதால், சுகமயமாகி எதிரொலித்தன. அவ்வாறு அசையும்-அசையாப் பொருள் அனைத்திலும் உயிருக்குயிராய் பரவி நிற்கும் முனிவரான சுகாசார்யாரை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment