||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
004. திருவெள்ளறை
ஸ்வேதகிரி – திருச்சி
நான்காவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் – 24 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 71 – முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம் - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 192 - 201 - இரண்டாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
------------
2. திருமங்கையாழ்வார் - 13 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1368 - 1377 - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்
- திவ்ய ப்ரபந்தம் - 1851 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம் - 1 பாசுரம்
2. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2706 - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
3. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்
- திவ்ய ப்ரபந்தம் - 2773 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் - (71)
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
கல் இருந்தான் தந்தை கமலத்தோன்
அக்கமலத்தில் இருந்தான் தந்தை அரங்கேசன்
என்றே தொல்லை மறை உள் அறையா நின்றமையால்
உள்ளமே கள்ளம் இன்றி வெள்ளறையான் தானே விரும்பு
- உள்ளமே - எனது மனமே!
- கல் இருந்தான் தந்தை - கைலாச மலையில் இருப்பவனாகிய சிவபெருமானது திருத்தந்தை
- கமலத்தோன் - திருமாலினது நாபித் தாமரையில் தோன்றியவனாகிய பிரம்மனாவன்
- அக் கமலத்தில் இருந்தான் தந்தை - அந்தத் தாமரை மலரில் வாழ்பவனாகிய பிரம்மனது திருத்தந்தை
- அரங்கேசன் - திருவரங்கநாதனாவன் என்று
- தொல்லை மறையுள் அறையா நின்றமையால் - பழமையாகிய வேதங்களில் சொல்வதனால்
- கள்ளம் இன்றி - கபடம் இல்லாமல்,
- வெள்ளறையான் தாளே - திருவெள்ளறை என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானது திருவடிகளையே
- விரும்பு - விரும்பிச் சேர்வாயாக
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment