||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.17
காஸ்²யஸ்²ச பரமேஷ் வாஸ:
ஸி²க²ண்டீ³ ச மஹாரத²:|
த்⁴ருஷ்டத்³யும் நோ விராடஸ்²ச
ஸாத்ய கிஸ்²சா பராஜித:||
- காஸ்²யஸ்² - காசி (வாரணாசி) மன்னன்
- ச - மற்றும்
- பரமேஷ் வாஸஹ - வில்லாளிகளில் மிகச் சிறந்த
- ஸி²க²ண்டீ³ - சிகண்டி
- ச - மற்றும்
- மஹாரத²ஹ - ஆயிரக்கணக்கானவர்களுடன் தனியாக நின்று போரிடக் கூடியவன்
- த்⁴ருஷ்டத்³யும் ந - திருஷ்டத்யும்னன் (துருபத மன்னனின் குமாரன்)
- விராடஸ்² - விராடன் (பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த போது இடமளித்த மன்னன்)
- ச - மற்றும்
- ஸாத்யகிஸ்² - சாத்யகி (யுயுதானன், பகவான் கிருஷ்ணனின் தேரோட்டி)
- ச - மேலும்
- அப ராஜிதஹ - என்றும் வெல்ல முடியாத
மன்னா! பெரும் வில்லாளி காசிராஜனும், பெரும் வீரரான சிகண்டீயும், ஆயிரக் கணக்கானவர்களுடன் தனியாக போரிடக் கூடிய துருபதனின் குமாரன் த்ருஷ்டத்யுமனும், மறைந்து வாழ உதவிய விராடனும், வெல்ல முடியாதவனான சாத்யகியும் தத்தம் சங்குகளை ஊதினர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment