||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
வருணன் கிருஷ்ணனை காணல்|
தன் மாளிகையில் கிருஷ்ணனை காண வருணன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான். வருணன் கிருஷ்ணனின் காலில் விழுந்து வணங்கி அவனை ஒரு தெய்வத்தை கும்பிடுவது போல கும்பிட்டான் .அவன் தன் இரண்டு கைகளையும் கூப்பி கிருஷ்ணனை பார்த்து ,"பகவானே! நான் இன்று பெரும் பேரு பெற்றவன். தங்களுடைய பாதங்களை தொடுகிறவர்கள் பிறவிக் கடலிலிருந்து காப்பாற்ற படுகிறார்கள். யார் என்று தெரியாமல் தங்கள் தகப்பனாரை இங்கே பிடித்து அழைத்து வந்த என் தூதரை மன்னித்து விடுங்கள் . அன்பு கூர்ந்து எங்களை ஆசிர்வதியுங்கள். இதோ இருக்கிறார் தங்கள் தகப்பனார் அவரை அழைத்து செல்லலாம் என்று சொன்னான்.
வருணனின் அடக்கத்தை கண்டு கிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தான். அவன் தன் தகப்பனாரோடு விடு திரும்ப எல்லோரும் மிகவும் சந்தோசம் அடைந்தார்கள் . கிருஷ்ணனுடைய இத்தகைய செயல்கள் அவன் கடவுள் தான் என்கிற நம்பிக்கையை கோபர்களுக்கு ஏற்படுத்தியது. அவனை இன்னும் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினர். அவன் நிரந்தரமாக வசிக்கும் வைகுண்டத்தை பார்க்கவேண்டும் என்று விரும்பினர். கிருஷ்ணன் வைகுண்டத்தை பார்க்கும்படி செய்தான் வைகுண்டத்தில் ஸ்ரீமத் நாராயணனை அவர்கள் கண்டார்கள்.தங்கள் கண்களால் கண்டதை அவர்கள் நம்பமுடியவில்லை. பகவானின் செயலகளே ஆச்சர்யம்தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment