About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 September 2023

திவ்ய ப்ரபந்தம் - 32 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 32 - மருத மரம் முறித்த, கௌஸ்துபம் அணிந்த திருமார்பு
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

பெரு மா உரலில்* 
பிணிப்புண்டிருந்து* 
அங்கு இருமா மருதம்* 
இறுத்த இப் பிள்ளை*
குரு மா மணிப் பூண்* 
குலாவித் திகழும்* 
திருமார்வு இருந்தவா காணீரே* 
சேயிழையீர்! வந்து காணீரே|


  • பெரு மா உரலில் – மிகப் பெரிய உரலோடு
  • பிணிப்புண்டு - கட்டுண்டு இருந்து 
  • அங்கு - அந்த நிலைமையிலே 
  • இரு மா மருதம் - இரண்டு பெரிய மருத மரங்களை
  • இறுத்த – முறித்து அருளின 
  • இ பிள்ளை - இக்கண்ணபிரானுடைய
  • குரு மா - மிகவும் சிறந்த 
  • மணி பூண் – கௌஸ்துப ஆபரணமானது 
  • குலாவி திகழும் - அசைந்து ஆடும்
  • திருமார்வு இருந்த வா காணீர்! - திரு மார்பின் அழகினை வந்து பாருங்கள்
  • சேயிழையீர் வந்து காணீரே - சிறந்த ஆபரணங்களை உடைய பெண்களே! வந்து பாருங்கள்

தான் செய்த குறும்புத் தனத்திற்காக, அவனை விடப் பெரியதாகவும், மிகுந்த கனத்துடன் இருந்த மிகவும் பெரிய உரலில் யசோதையால் மிகப் பெரிய உரலில் கட்டப்பட்டு, பின் அந்த உரலை தன்னுடைய வலிமையால் இழுத்துச் சென்று, அங்கிருந்த இரண்டு பெரிய மருத மரங்களுக்கு நடுவில் நுழைந்து சென்ற முறித்துவிட்ட இந்தப் கண்ணனின் திருமார்பையும், அந்த திருமார்பில், திருமாலையே தன்வயப்படுத்தி என்றும் பிரியாது மிகவும் நெருக்கமாய் இணைந்து இருக்கும் திருமறுவான திருமகள், மிகுந்த பேரொளியுடன் மின்னுகின்ற புனிதத்தன்மையுடைய அழகிய திருத்துழாய் மாலை, பேரொளி மிகுந்த கனமான இரத்தின மாலை ஆகிய மூவரும் சேர்ந்து பொலிவுடன் அமைந்து மின்னுகின்ற அழகையும் வந்து பாருங்கள் என்று செம்மையுடைய அணிகலன் அணிந்திருக்கும் பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment