||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
010. திருப்புள்ளம் பூதங்குடி
பூத புரி - கும்பகோணம்
பத்தாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ வல்வில் ராமர் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ பொற்றாமறையாள் தாயார் ஸமேத ஸ்ரீ வல்வில் ராமர் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: வல்வில் ராமர்
- பெருமாள் உற்சவர்: சக்கரவர்த்தி திருமகன்
- தாயார் மூலவர்: பொற்றாமறையாள்
- தாயார் உற்சவர்: ஹேமாம்புஜவல்லி
- திருமுக மண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: புஜங்க சயனம்
- புஷ்கரிணி/தீர்த்தம்: ஜடாயு
- விமானம்: சோபன
- ஸ்தல விருக்ஷம்: புன்னை
- ப்ரத்யக்ஷம்: ராமன், ஜடாயு
- ஸம்ப்ரதாயம்: வட கலை
- மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 10
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
ஜடாயுவாகிய புள்ளிற்கு ராமர் மோட்சம் கொடுத்து ஈமக்கிரியை செய்த நிகழ்வை குறிக்கும் தலமாதலால் இத்தலம் திருப்புள்ளம் பூதங்குடி ஆனது. வைணவ சம்பிராதயத்தில் வைணவர்களுக்கு இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் அருகே ஸ்ரீபெரும்புதூர். ராமனுஜர் அவதரித்த இத்தலத்ததை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள். மற்றொன்று தஞ்சாவூர் அருகே திருப்புள்ளம் பூதங்குடி. இதை ஆசாரியர்கள் சிறப்பித்தார்கள். ராமர் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமர் காட்சியளித்தார். இதைக் கண்ட திருமங்கை, அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயுவிற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமர் வல்வில் ராமர் என அழைக்கப்படுகிறார்.
சீதையை ராவணன் கவர்ந்து சென்ற போது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமா என முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த ராம, லட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறி விட்டு உயிர் துறந்தார். இதைக் கண்டு வருந்திய ராமர் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமருக்கு உதவி புரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment