About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

திவ்ய ப்ரபந்தம் - 51 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.8

ஸ்ரீ:
 ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 51 - பூமா தேவி அளித்த 
உச்சி மணிச் சுட்டி
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

கச்சொடு பொன் சுரிகை* 
காம்பு கனக வளை*
உச்சி மணிச் சுட்டி* 
ஒண் தாள் நிரைப் பொன் பூ*
அச்சுதனுக்கென்று
அவனியாள் போத்தந்தாள்*
நச்சு முலை உண்டாய்! தாலேலோ* 
நாராயணா! அழேல் தாலேலோ!

  • கச்சொடு - இடுப்புப் பட்டையையும்
  • பொன் - பொன்னால் செய்த
  • சுரிகை - உடை வாளையும்
  • காம்பு - காம்புகளை உடைத்த பூவடிவிலுள்ள
  • கனம் - பொன்னாலான
  • வளை - வளைகளையும்
  • மணி - ரத்னம் இழைத்துச் செய்யப்பட்டதா
  • உச்சி - உச்சியிலே சாத்தக் கூடிய
  • மணிச்சுட்டி - மணிச் சுட்டியையும்
  • ஒள் தாள் - அழகிய காம்புகளுடைய
  • நிரை - அடர்த்தியான
  • பொற்பூ - தங்கப் பூக்களையும்
  • அச்சுதனுக்கு என்று - கண்ணபிரானுக்குக் கொடுப்பீர் என்று
  • அவனியாள் - பூமிப் பிராட்டியானவள்
  • போத்தந்தாள் - அனுப்பினாள்
  • நஞ்சு - விஷமேற்றின
  • முலை - பூதனையின் முலையின் பாலை
  • உண்டாய் - உண்ட கண்ணனே! 
  • தாலேலோ! - கண்ணுறங்கு
  • நாராயணா! - நாராயணா!
  • அழேல் தாலேலோ! - அழாமல் கண்ணுறங்கு!

பொன்னாலான வளையல்களையையும், நெற்றியிலணிய உயர்ந்த கற்களாலான நெற்றிச் சுட்டியையும், காம்புகளை உடைத்த பூவடிவிலுள்ள தங்கத்திலான ஆபரணங்களையையும், பூமிப்பிராட்டியானவள் கண்ணனுக்கு கொடுக்குமாறு அனுப்பியுள்ளாள். பூதனையின் முலையிலிருந்த விஷப்பாலை உண்ட கண்ணனே, கண்ணுறங்கு, நாராயணா! அழாமல் கண்ணுறங்கு!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment