About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

திவ்ய ப்ரபந்தம் - 50 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.7

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 50 - திருமகள் அனுப்பிய திருத்துழாய் மாலை
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

கானார் நறுந்துழாய்* 
கை செய்த கண்ணியும்* 
வானார் செழும் சோலைக்* 
கற்பகத்தின் வாசிகையும்*
தேனார் மலர் மேல்* 
திருமங்கை போத்தந்தாள்* 
கோனே! அழேல் அழேல் தாலேலோ* 
குடந்தைக் கிடந்தானே! தாலேலோ!

  • கான் ஆர் - காட்டில் வளர்ந்துள்ள
  • நறு துழாய் - மணம் மிக்க துளசியால்
  • கை செய்த - தொடுத்த
  • கண்ணியும் - மாலையையும்
  • வான் ஆர் - சுவர்க்க லோகத்தில் 
  • செழு - செழுமை தங்கிய
  • சோலை - சோலையாய்த் தழைத்த
  • கற்பகத்தின் - கல்ப வ்ருக்ஷத்தின் 
  • வாசிகையும் - பூக்களால் தொடுத்த மாலையையும்
  • தேன் ஆர் - தேன் நிறைந்துள்ள
  • மலர் மேல் - செந்தாமரை மலரில் உறைகின்ற 
  • திருமங்கை - பெரிய பிராட்டியார்
  • போத்தந்தாள் - அனுப்பினாள் 
  • கோனே - ஸர்வ ஸ்வாமியான கண்ணனே!
  • அழேல் அழேல் தாலேலோ! - அழாதே அழாதே
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 
  • குடந்தை - திருக்குடந்தையிலே 
  • கிடந்தானே - உறங்கும் பிரானே!
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

தேன் நிறைந்த சிவப்புத் தாமரையில் உறைபவளான பெரிய பிராட்டி, காட்டில் உற்பத்தியான மணமுள்ள துளசியால் தொடுத்த மாலையையும், சுவர்க்க லோகத்தில் பசுமையாகவும் சோலையாகவும் தழைத்துக் கிடந்த கல்பக வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த நெற்றியில் அணிவதற்கு மாலையையும் கொடுத்து அனுப்பியிருக்கிறாள். இளவரசே! கண்ணா, அழாதே, அழாதே, கண்ணுறங்கு, திருக்குடந்தையில் சயனத்திருப்பவனே கண்ணுறங்கு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment