About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 2 November 2023

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 2

திருமங்கையாழ்வார்

021. திவ்ய ப்ரபந்தம் - 1495 - பார்த்தன் தேரூர்ந்தவன் வாழும் இடம் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்* விறல் வியூகம் விள்ள* 
சிந்துக்கோன் விழ* ஊர்ந்த விமலன் ஊர்* 
கொள்ளைக் கொழு மீன்* உண் குருகு ஓடி பெடையோடும்*
நள்ளக் கமலத்* தேறல் உகுக்கும் நறையூரே|

022. திவ்ய ப்ரபந்தம் - 1496 - தேவ தேவன் சேரும் ஊர் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
பாரை ஊரும் பாரம் தீரப்* பார்த்தன் தன்*
தேரை ஊரும்* தேவ தேவன் சேரும் ஊர்* 
தாரை ஊரும்* தண் தளிர் வேலி புடை சூழ*
நாரை ஊரும்* நல் வயல் சூழ்ந்த* நறையூரே|

023. திவ்ய ப்ரபந்தம் - 1497 - திருமாலின் துணை கிடைக்கும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தாமத் துளப* நீள் முடி மாயன் தான் நின்ற*
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த* நறையூர் மேல்*
காமக் கதிர் வேல் வல்லான்* கலியன் ஒலி மாலை* 
சேமத் துணை ஆம்* செப்பும் அவர்க்கு திருமாலே|

024. திவ்ய ப்ரபந்தம் - 1498 - பக்தர்களே! திருநறையூர் சேருங்கள்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும்*
அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன்*
கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல்* பள்ளி
கூடினான் திருவடியே கூட கிற்பீர்*
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*
மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு*
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

025. திவ்ய ப்ரபந்தம் - 1499 - ஊழி முதல்வன் உறைவிடம் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம்*
குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்*
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை*
இணை அடிக்கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும்*
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி*
உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள*
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

026. திவ்ய ப்ரபந்தம் - 1500 - திருவிக்கிரமன் திருநறையூரில் உள்ளான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி*
பார் அகலம் திருவடியாப் பவனம் மெய்யா*
செவ்வி மாதிரம் எட்டும் தோளா* அண்டம்
திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர்*
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*
கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏற*
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

027. திவ்ய ப்ரபந்தம் - 1501 - நரசிங்கனது நறையூரை நண்ணுங்கள்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பைங் கண் ஆள்-அரி உரு ஆய் வெருவ நோக்கிப்*
பரு வரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி*
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம்*
அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர்*
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற*
விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த*
செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

028. திவ்ய ப்ரபந்தம் - 1502 - சோழன் பூசித்த நறையூர் சேருங்கள்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
அன்று உலகம் மூன்றினையும் அளந்து* 
வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு*
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு*
விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து*
பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப்*
புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன்*
தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

029. திவ்ய ப்ரபந்தம் - 1503 - பக்தர்களே! உடனே திருநறையூர் சேருங்கள்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய்*
தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய்*
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய்*
தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர்*
மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை*
விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட*
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

030. திவ்ய ப்ரபந்தம் - 1504 - நறையூரில் கண்ணன் கழலிணை சேரலாம்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*
முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே*
இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*
இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*
மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*
வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்*
சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

031. திவ்ய ப்ரபந்தம் - 1505 - பக்தர்கட்கு ஏற்ற இடம் திருநறையூர் தான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன்*
மன் எல்லாம் முன் அவியச் சென்று* 
வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்*
சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர்*
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு*
எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட*
திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

032. திவ்ய ப்ரபந்தம் - 1506 - திருநறையூரில் திருமால் அருள் கிடைக்கும்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
தார் ஆளன் தண் அரங்க ஆளன்* 
பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேர் ஆளன்* 
ஆயிரம் பேர் உடைய ஆளன்*
பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர்*
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*
படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த*
தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே|

033. திவ்ய ப்ரபந்தம் - 1507 - விண்ணோர்க்கு விருந்தாவர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும்*
திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலை*
பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்*
புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த*
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்*
பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி*
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்*
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே|

034. திவ்ய ப்ரபந்தம் - 1508 - நறையூர் நம்பி தான் இராமபிரான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம்
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்* விண்ட நிசாசரரை*
தோளும் தலையும் துணிவு எய்தச்*
சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்* 
வேளும் சேயும் அனையாரும்* வேல் கணாரும் பயில் வீதி*
நாளும் விழவின் ஒலி ஓவா* நறையூர் நின்ற நம்பியே|

035. திவ்ய ப்ரபந்தம் - 1509 - நறையூர் நம்பி தான் பரசுராமன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முனி ஆய் வந்து மூவெழுகால்* முடி சேர் மன்னர் உடல் துணிய*
தனி வாய் மழுவின் படை ஆண்ட* தார் ஆர் தோளான் வார் புறவில்*
பனி சேர் முல்லை பல் அரும்பப்* பானல் ஒருபால் கண் காட்ட*
நனி சேர் கமலம் முகங் காட்டும்* நறையூர் நின்ற நம்பியே|

036. திவ்ய ப்ரபந்தம் - 1510 - நறையூர் நம்பி தான் வாமனன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
தெள் ஆர் கடல்வாய் விட வாய* சின வாள் அரவில் துயில் அமர்ந்து*
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்* இரந்தான் மாவலி மண்* 
புள் ஆர் புறவில் பூங் காவி* புலங்கொள் மாதர் கண் காட்ட*
நள் ஆர் கமலம் முகம் காட்டும்* நறையூர் நின்ற நம்பியே|

037. திவ்ய ப்ரபந்தம் - 1511 - நறையூர் நம்பி தான் கண்ணபிரான்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று* உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்*
விளியா ஆர்க்க ஆப்புண்டு* விம்மி அழுதான் மென் மலர்மேல்*
களியா வண்டு கள் உண்ண* காமர் தென்றல் அலர் தூற்ற*
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்* நறையூர் நின்ற நம்பியே|

038. திவ்ய ப்ரபந்தம் - 1512 - நறையூர் நம்பி தான் கம்சனைக் கொன்றவன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வில் ஆர் விழவில் வட மதுரை* விரும்பி விரும்பா மல் அடர்த்து*
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான்* பாய்ந்தான் காளியன்மேல்* 
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்* சோமுச் செய்யும் தொழிலினோர்*
நல்லார் மறையோர் பலர் வாழும்* நறையூர் நின்ற நம்பியே|

039. திவ்ய ப்ரபந்தம் - 1513 - நறையூர் நம்பி தான் வாணன் தோள்களைத் துணித்தவன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வள்ளி கொழுநன் முதலாய* மக்களோடு முக்கணான் வெள்கி ஓட* 
விறல் வாணன்* வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்* 
பள்ளி கமலத்திடைப் பட்ட* பகு வாய் அலவன் முகம் நோக்கி*
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த* நறையூர் நின்ற நம்பியே|

040. திவ்ய ப்ரபந்தம் - 1514 - நறையூர் நம்பி தான் பார்த்தசாரதி
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மிடையா வந்த வேல் மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
குடையா வரை ஒன்று எடுத்து* 
ஆயர் கோ ஆய் நின்றான் கூர் ஆழிப் படையான்*  
வேதம் நான்கு ஐந்து வேள்வி* அங்கம் ஆறு இசை ஏழ்*
நடையா வல்ல அந்தணர் வாழ்* நறையூர் நின்ற நம்பியே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment