||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 14
ஸர்வக³: ஸர்வ வித்³ பா⁴நுர்
விஷ்வக் ஸேநோ ஜநார்த³ந:|
வேதோ³ வேத³வித்³ அவ்யங்கோ³
வேதா³ங்கோ³ வேத³வித் கவி:||
- 124. ஸர்வக³ஸ் - எல்லா உலகங்களையும் தன்னிடம் வைத்துள்ளவன்.
- 125. ஸர்வ வித்³ - எல்லாவற்றையும் அடைபவன்.
- 126. பா⁴நுர் - விளக்கமாக இருப்பவன்.
- 127. விஷ்வக் ஸேநோ - எங்கும் எவரையும் காத்தலுக்குரிய சேனையை உடையவன்.
- 128. ஜநார்த³நஹ - பகைவர்களை அழிப்பவன்.
- 129. வேதோ³ - வேத சாஸ்திரங்களைத் தருபவன்.
- 130. வேத³வித்³ - வேதப்பொருளை ஐயந்திரிபின்றி அறிந்தவன்.
- 131. அவ்யங்கோ³ - வேதாங்கங்கள் நிறைந்திருப்பவன்.
- 132. வேதா³ங்கோ³ - வேதங்களை அங்கமாக சரீரமாக உடையவன்.
- 133. வேத³வித் - வேதப் பொருளான தர்மங்களை அறிந்தவன்.
- 134. கவிஹி - அனைத்தையும் ஊடுருவிப் பார்ப்பவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment