||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.14
தஸ்மாத்³ ஏகேந மநஸா
ப⁴க³வாந் ஸாத்வதம் பதி:|
ஸ்²ரோதவ்ய: கீர்தி தவ்யஸ்²ச
த்⁴யேய: பூஜ்யஸ்²ச நித்யதா³||
- தஸ்மாத்³ - ஆகையால்
- ஸாத்வதம் பதிஹி - ஜீவன்களுக்கெல்லாம் பதியான
- ப⁴க³வாந் - மகா விஷ்ணுவானவர்
- ஏகேந மநஸா - ஏகாக்ரமான மனத்தால்
- நித்யதா³ - எப்பொழுதும்
- ஸ்²ரோதவ்யஹ் - கேட்கத் தக்கவர்
- கீர்த்தி தவ்யஸ்² ச - ஸ்தோத்தரிக்கத் தகுந்தவர்
- த்⁴யேயஃ - தியானம் செய்யத் தக்கவர்
- பூஜ்யஸ்² ச - பூஜிக்கவும் தக்கவர்
ஆகையால், மனத்தைச் சலனமின்றி ஒருநிலைப்படுத்தி, பக்தர்களுக்கு அன்பான பகவானை எப்போதும் துதிக்க வேண்டும். அவரது சரிதங்களைக் கேட்க வேண்டும்; (உருவத்தைத்) தியானம் செய்ய வேண்டும்; (திரு அடிகளில்) பூஜை புரிய வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment