||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
008. திருக்கூடலூர்
ஸங்கம க்ஷேத்திரம் - கும்பகோணம்
எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1358 - 1367 - ஐந்தாம் பத்து - இரண்டாம் திருமொழி
------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
உண்டு கேட்டு உற்று மோந்துப் பார்க்கும் ஐவர்க்கே*
தொண்டு படலாமோ உன் தொண்டனேன் விண்டு இலங்கும்*
ஆடல் ஊர் நேமி முதல் ஐம்படையாய் அன்பு உடையாய்*
கூடலூராய் இதனைக் கூறு*
- விண்டு இலங்கும் – விட்டு விட்டுப் பிரிகாசிக்கின்ற
- ஆடல் ஊர் – வெற்றி பொருந்திய
- நேமிமுதல் – சக்கரம் முதலிய
- ஐம் படையாய் – பஞ்சாயுதங்களை உடையவனே!
- அன்பு உடையாய் – உயிர்களிடத்தில் நிர்ஹேதுகமான கிருபையை உடையவனே!
- கூடலூராய் – திருக்கூடலூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
- உன் தொண்டனேன் – உனக்கே அடியவனாகிய நான் அவ்வாறு அடிமையாக இருத்தலை விட்டு
- உண்டு – இனிய உணவுகளைச் சுவைத்தும்
- கேட்டு – இனிய இசை முதலியவற்றைக் கேட்டும்
- உற்று – இன்பம் உண்டாக்கும் பொருள்களைப் பரிசித்தும்
- மோந்து – நறுமணமுள்ள பொருள்களை மோந்தும்
- பார்க்கும் – நற்காட்சியுள்ள பொருள்களைக் கண்டும் மகிழ்கின்ற
- ஐவர்க்கே – பஞ்சேந்திரியங்கட்கே
- தொண்டு படல் ஆமோ – அடிமைப்படுதல் தகுதியாகுமோ?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment