||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
81 வார்த்தைகள்
- 1 அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே|
- 2 அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே|
- 3 தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே|
- 4 தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே|
- 5 பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே|
- 6 பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே|
- 7 தாய்க்கோலஞ் செய்தேனோ அநஸூயைப் போலே|
- 8 தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே|
- 9 மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே|
- 10 முதலடியைப் பெற்றேனோ அஹலிகையைப் போலே|
- 11 பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே|
- 12 எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே|
- 13 ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையாரைப் போலே|
- 14 அவன் சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே|
- 15 ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே|
- 16 யான் ஸத்யம் என்றேனோ க்ருஷ்ணனைப் போலே|
- 17 அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே|
- 18 அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே|
- 19 அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே|
- 20 அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே|
- 21 தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியாரைப் போலே|
- 22 தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே|
- 23 ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே|
- 24 ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே|
- 25 அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே|
- 26 அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே|
- 27 ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே|
- 28 அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே|
- 29 கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே|
- 30 கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப் போலே|
- 31 குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வானைப் போலே|
- 32 கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே|
- 33 இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவானைப் போலே|
- 34 இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே|
- 35 இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே|
- 36 இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியாரைப் போலே|
- 37 அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியாரைப் போலே|
- 38 அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே|
- 39 அனுப்பி வைய்யும் என்றேனோ வசிஷ்டரைப் போலே|
- 40 அடி வாங்கினேனோ கொங்கிற் பிராட்டியைப் போலே|
- 41 மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே|
- 42 மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே|
- 43 பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே|
- 44 பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே|
- 45 வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே|
- 46 வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே|
- 47 அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே|
- 48 அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே|
- 49 இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே|
- 50 இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே|
- 51 இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே|
- 52 இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே|
- 53 காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே|
- 54 கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே|
- 55 இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே|
- 56 இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே|
- 57 இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே|
- 58 நில் என்று பெற்றேனோ இடையற்றூர்குடி நம்பியைப் போலே|
- 59 நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே|
- 60 அவன் போனான் என்றேனோ மாருதியாண்டானைப் போலே|
- 61 அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே|
- 62 அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே|
- 63 அருள் ஆழங்கண்டேனோ நல்லானைப் போலே|
- 64 அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே|
- 65 ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே|
- 66 அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே|
- 67 அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே|
- 68 கள்வன் இவன் என்றேனோ லோககுருவைப் போலே|
- 69 கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே|
- 70 சுற்றி கிடந்தேனோ திருமாலையாண்டானை போலே|
- 71 சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூராரைப் போலே|
- 72 உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே|
- 73 உடம்பை வெறுத்தேனோ நறையூராரைப் போலே|
- 74 என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே|
- 75 யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே|
- 76 நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே|
- 77 நீரோருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே|
- 78 வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே|
- 79 வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே|
- 80 தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே|
- 81 துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment