||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
இந்த ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமத் பகவத் கீதையைப் போன்றே கேள்வி பதிலின் வடிவில் அமைந்துள்ளது. கலி யுகத்தின் தீய விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கான மார்கத்தை அறிய நைமிசாரண்யத்தில் கூடிய முனிவர்கள், ஸ்ரீல சூத கோஸ்வாமியிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரளித்த பதில்களின் வடிவில் இஃது அமைந்துள்ளது. ஸ்ரீல சூத கோஸ்வாமியோ, பரிக்ஷித் மன்னரின் கேள்விகளுக்கு ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி எவ்வாறு பதிலளித்தாரோ, அதை அப்படியே நைமிசாரண்யத்தின் முனிவர்களிடம் விவரித்தார்.
- திருவண்ணாமலையில் இறைவன் மலையாய் இருக்கிறார் என்று கேள்வியுற்றிருப்போம்.
- நைமிஷாரண்யத்தில் இறைவன் காடாக இருக்கிறார்.
- புஷ்கரம் என்னும் புண்ணிய தல த்தில் இறைவனே ஏரியாக இருந்து அனைவரின் ஸம்ஸார தாகத்தையும் தணிக்கிறார்.
- மரங்களில் அரசமரமாக வீற்றிருக்கிறார்.
- அது போல், புத்தகங்களில் ஸ்ரீமத் பாகவதமாக இறைவன் இருக்கிறார்.
ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி"
என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம்.
ஸ்ரீமத் பாகவதத்தின் உருவில் ப்ரத்யக்ஷமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார்.
இந்த பாகவதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
புராணம் என்றால் படிப்பார்கள், சொல்லுவார்கள், பிறர் சொல்லக் கேட்பார்கள். யாரவது பருகினார்கள், அருந்தினார்கள், சுவைத்தார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியுமா? ஆனால் இந்த புராணத்தைப் பருக முடியும், அதுவும் காது வழியாக. தேனினும் இனிய பகவானின் குணங்களை, லீலைகளைக் சொல்லும் நூல், சொல்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு, என அனைவருக்கும் இனிமையை வாரி வழங்கும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment