||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
- ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவை திருப்பல்லாண்டு, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு
- அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி
- ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது நான்முகன் திருவந்தாதி
- பாடியவர்களாற் பெயர் பெற்றவை பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி
- அளவால் பெயர் பெற்றவை பெரிய திருமொழி, திருவெழுகூற்றிருக்கை
- பாவாற் பெயர் பெற்றவை, திருவாசிரியம், திருச்சந்த விருத்தம், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்
- செயலாற் பெயர் பெற்றவை திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி
- தன்மையால் பெயர் பெற்றவை திருவிருத்தம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருமாலை
- சிறப்பால் பெயர் பெற்றது திருவாய்மொழி
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய ப்ரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் எனத் தொகுத்தார்.
- 1. பொய்கை ஆழ்வார்: அம்சம் - பாஞ்சசன்னியம் (சங்கு), அவதார ஸ்தலம் - பொற்றாமரைக் குளம், திருவெஃகா
- 2. பூதத்தாழ்வார்: அம்சம் - கௌமோதகம் (கதை), அவதார ஸ்தலம் - திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)
- 3. பேயாழ்வார்: அம்சம் - நாந்தகம் (வாள்), அவதார ஸ்தலம் - ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர்
- 4. திருமழிசை ஆழ்வார்: அம்சம் - ஆழி (சக்கரத்தாழ்வார்), அவதார ஸ்தலம் - திருமழிசை
- 5. நம்மாழ்வார்: அம்சம் - சேனை முதலியார், அவதார ஸ்தலம் - திருக்குருகூர்
- 6. மதுரகவி ஆழ்வார்: அம்சம் - நித்யஸூரி குமுதர், அவதார ஸ்தலம் - திருக்கோளூர்
- 7. பெரியாழ்வார்: அம்சம் - கருடாழ்வார், அவதார ஸ்தலம் - ஸ்ரீ வில்லிபுத்தூர்
- 8. ஆண்டாள்: அம்சம் - பூமாதேவி, ஸ்ரீ அவதார ஸ்தலம் - வில்லிபுத்தூர்
- 9. குலசேகர ஆழ்வார்: அம்சம் - கௌஸ்துபம், அவதார ஸ்தலம் - திருவஞ்சிக்களம்
- 10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்: அம்சம் - வைஜயந்தி (வனமாலை), அவதார ஸ்தலம் - திருமண்டங்குடி
- 11. திருப்பாணாழ்வார்: அம்சம் - ஸ்ரீவத்ஸம், அவதார ஸ்தலம் - உறையூர்
- 12. திருமங்கை ஆழ்வார்: அம்சம் - சார்ங்கம் (வில்), அவதார ஸ்தலம் - திருக்குறையலூர் (திருவாலி)
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment