About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 8 & 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

(8)
யுதி⁴ஷ்டிர உவாச| 
கிமேகம் தைவதம் லோகே 
கிம் வாப்யேகம் பராயணம்|
ஸ்துவந்த: கம் கமர்ச் சந்த: 
ப்ராப்நுயுர் மாநவஸ: ஸு²ப⁴ம்||


ஸ்துவந்த: - ஸ்துவந்தஹ்
சந்த: - சந்தஃ
மாநவஸ: - மாநவஸஸ்²

(9)
கோ த⁴ர்ம: ஸர்வ த⁴ர்மாணாம் 
ப⁴வத: பரமோ மத:|
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் 
ஜந்ம ஸம்ஸார பந்தநாத்:||


த⁴ர்ம: - த⁴ர்மஸ்
ப⁴வத: - ப⁴வதஃ
மத: - மதஹ
பந்தநாத்: பந்தநாத்து

8 & 9 - தருமர் (யுதி⁴ஷ்டிரர்) கூறினார்:

சந்தனு மஹாராஜாவுக்கும் கங்கா தேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். இவர் மகா ஞானி. ஞானத்தைச் சொல்பவர் பீஷ்மர், கேட்பவர் தரும தேவதையின் புதல்வர். சொல்லப்படும் பொருளோ ஆசார்யரால் விரும்பிப் போற்றப் படுகிறது. கேட்பவனுக்கு நல்லவற்றைச் செய்யும் என்னும் நம்பிக்கையுடனும், நல்ல மனதுடனும் சொல்கிறார். சொல்லும் பீஷ்மரும், கேட்கும் தருமரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர். எனவே, மேன்மையை அளிக்கும் நல்லவை இங்கே கேட்கப்படுகின்றன. தர்மங்களில் சிறந்ததாகப் பீஷ்மர் எதைக் கருதுகிறாரோ, அதை வெளியிட வேண்டுமென்று தருமர் கேட்கிறார்: 

  • 1. ஸாஸ்திரங்களில் மிக உயர்ந்த தெய்வமாக, ஒப்பற்ற தெய்வமாகக் கூறப்படும் தெய்வம் எந்தத் தெய்வம் என்று கருதுகிறீர்?
  • 2. இகம், பரம் ஆகிய இரண்டிலும் விருப்பமுடன் அடையத்தக்க பொருளாக இருப்பது எது?
  • 3. யாரைப் புகழ்ந்து பாடி வழிபட்டால் உயர்ந்த நலனைப் பெற முடியும்.
  • 4. யாரை மனதால் தியானித்தும், வாக்கால் திருநாமங்களைச் சொல்லியும், மலர் கொண்டு கையினால் அர்ச்சித்தும் பெறுதற்கரிய பலனைப் பெற முடியும்?
  • 5. எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாகத் தங்களால் மனதாரக் கருதும் தருமம் எது?
  • 6. பிறத்தல், வளர்தல், மூப்பெய்தல், இறத்தல், புண்ய பாபங்களுக்கு ஏற்பப் பயனை அனுபவித்தல் ஆகியவற்றைக் கொண்ட உயிர்கள் எதை ஜபித்துப் பிறவித் தளையில் இருந்து விடுபட முடியும்? மோட்ச சாதனத்தைத் தருவது எது?

இவ்வாறு கேள்விகள் கேட்ட தருமருக்குப் பீஷ்மர் கூறலானார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment