About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.2

த⁴ர்ம: ப்ரோஜ்ஜி²த கைதவோத்ர பரமோ 
நிர்மத் ஸராணாம் ஸதாம்|
வேத்³யம் வாஸ்தவமத்ர வஸ்து ஸி²வத³ம் 
தாபத்ர யோந் மூலநம்|| 
ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹாமுநி க்ருதே 
கிம் வா பரைர் ஈஸ்²வர꞉|
ஸத்³யோ ஹ்ருத்³ய வருத்⁴யதேத்ர க்ருதிபி⁴:
ஸு²ஸ்²ரூ ஷுபி⁴ஸ் தத் க்ஷணாத்||

  • மஹா முநி க்ருதே - ஸ்ரீமன் நாராயணரால் முதலில் உபதேசிக்கப்பட்ட
  • அத்ர - இந்த
  • ஶ்ரீமத்³ பா⁴க³வதே - அழகான பாகவதத்தில்
  • நிர்மத் ஸராணாம் - அஸூயை (பொறாமை) அற்றவர்களான
  • ஸதாம் - ஸஜ்ஜனங்களுக்காக
  • ப்ரோஜ்ஜி²த கைதவோ - அடியோடு அகற்றப்பட்ட கபடத்தையும் பலாபி ஸந்தியையும் உடையதான
  • பரமோ - மிக உயர்ந்ததான
  • த⁴ர்மஃ - பாகவத தர்மம் கூறப்பட்டிருக்கிறது
  • அத்ர - இந்த பாகவதத்தில்
  • வாஸ்தவம் - பரமார்த்தமானதும், என்றும் அழியாததும்
  • ஸி²வத³ம் - க்ஷேமத்தை அளிப்பதும்
  • தாப த்ரயோந் மூலநம் - ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களை வேருடன் அகற்றுவதுமான
  • வஸ்து - பரமாத்ம வஸ்துவானது
  • வேத்³யம் - அறிய முடிந்ததாக இருக்கிறது
  • பரைர் - மற்ற சாஸ்திரங்களால்
  • ஈச்வரஹ - பரமாத்மா
  • ஹ்ருதி³ - ஹ்ருதயத்தில்
  • ஸத்³யோ - கேட்ட மாத்திரத்திலே (உடனேயே) 
  • அவருத்⁴யதே கிம் வா - நிலை நிறுத்தப்படுகிறாரா என்ன?
  • அத்ர - இந்த பாகவதத்திலோ என்றால் 
  • க்ருதிபி⁴ஹ் - புண்ணியவான்களான
  • ஸு²ஸ்²ரூ ஷுபி⁴ஸ் - கேட்க விருப்பம் கொண்டவர்களால்
  • தத் க்ஷணாத் - அந்த க்ஷணத்திலேயே நிலை நிறுத்தப்படுகிறார்

பௌதிக நோக்கம் கொண்ட அனைத்து மதச் செயல்களையும் முற்றிலுமாக நிராகரித்து, இந்த பாகவத புராணம் மிக உயர்ந்த உண்மையை முன் வைக்கிறது, இது இதயத்தில் தூய்மையான பக்தர்களால் நிலை நிறுத்தப்படும். அனைவரின் நலனுக்காக மாயையில் இருந்து வேறுபடுத்தப்பட்ட யதார்த்தமே உயர்ந்த உண்மை. இத்தகைய உண்மை முப்பெரும் துன்பங்களை வேரோடு பிடுங்கி எறிகிறது. மகா முனிவரான ஸ்ரீ வியாச தேவரால் தொகுக்கப்பட்ட இந்த அழகான பாகவதம் கடவுளை உணர போதுமானது. ஒருவன் பாகவதத்தின் செய்தியை கவனத்துடனும் பணிவுடனும் கேட்ட உடனேயே, அவன் பரமாத்மாவிடம் பற்று கொள்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment