About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆழ்வார்கள் உடையவர் தனியன்
(ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்தது)

5. பூ⁴தம் ஸரஸ்²ச மஹதா³ஹ் வய ப⁴ட்ட நாத²* 
ஸ்ரீ ப⁴க்தி ஸார குலஸே²க²ர யோகி³ வாஹாந்* 
ப⁴க்தாங்க்⁴ரி ரேணு பரகால யதீந்த்³ர மிஸ்²ராந்*
ஸ்ரீமத் பராங்குஸ² முனிம் ப்ரணதோஸ்மி நித்யம்|

  • பூதம் - கு ஸூ மத்தில் அவதரிக்கையாலே கடல் மலை பூதத்தார்
  • சரஸ்ய - பொற்றாமரைப் பூவில் அவதரித்த பொய்கையார்
  • மஹதாஹ்வய - செவ்வல்லிப் பூவிலே அவதரித்த பேயன்
  • பட்ட நாத - வித்துவக் கோஷ்டியிலே சென்று அவர்களை வென்று பரத்வ நிர்ணய முகேன பட்டர் பிரான் பெரியாழ்வார் 
  • ஸ்ரீ - பெரியாழ்வாருக்கு ஸ்ரீ யான ஆண்டாள்
  • ஸ்ரீ பக்தி சாரர் - திருமழிசையாழ்வார்
  • குலசேகர - பெரிய பெருமாள் விஷயத்தில் நிரவதிக பிரேமத்தையுடைய ஸ்ரீ குலசேகரப் பெருமாள்
  • யோகி வாஹான்- யோகி வாஹர் ஆகிறார் முனி வாஹரான பாண் பெருமாள் திருப்பாணாழ்வார்
  • பக்தாங்க்ரி ரேணு - தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் என்கை
  • பரகால - வாள் வீசும் பரகாலன் திருமங்கை ஆழ்வார்
  • யதீந்திர மிஸ்ரான் - மதுரகவி யாழ்வார் எதிராசராம் இவர்கள் சேர்த்தி இருப்பது
  • ஸ்ரீ மத் பராங்குச முநிம் - எல்லாரையும் அவயவ பூதராய் உடையராய் ஆழ்வார் தாம் இருப்பது 

நம்மாழ்வாரே முழு பகவத் ஸ்வரூபம், மற்ற ஆழ்வார்கள் அவருக்கு அவயங்கள். பூதத்தாழ்வாரே திருமுடி, பொய்கை பேய் இரு கண்கள், முகமே பட்டர்பிரான், கழுத்து திருமழிசை, இரு கைகளோ குலசேகரனும் திருப்பாணனும், தொண்டரடி தான் திருமார்பு, கலியன் நாபி, யதிராஜரே நம்மாழ்வாரின் திருவடி. இத்தனியன் ஸ்ரீ நன்ஜீயரின் தூண்டுதலின் பேரில் ஸ்ரீ பராசர பட்டரால் அருளிச் செய்யப்பட்டது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment