||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்⁴யான ஸ்லோகம் - 5
வஸுதே³ வஸுதம் தே³வம்,
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம்,
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||
இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று. வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்ட சம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார். ஜகத்குரு. முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment