About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 1

நாதமுனிகள் அருளிச் செய்தது

கு³ருமுக² மநதீ⁴த்ய* 
ப்ராஹ வே³தாந ஸே²ஷாந்* 
நரபதி பரிக்லுப்தம்* 
ஸு²ல்க மாதா³து காம:*
ஸ்²வஸு²ர மமர வந்த்³யம்* 
ரங்க³ நாத²ஸ்ய ஸாக்ஷாத்* 
த்³விஜ குல திலகம் தம்* 
விஷ்ணு சித்தம் நமாமி|

  • குருமுகம் - ஆசார்ய முகத்தாலே
  • அநதீத்ய - அப்யசிக்காமலே
  • ப்ராஹ - உபன்யசித்தாரோ
  • வேதான் - வேதங்களை
  • அசேஷான் - சமஸ்தமாகிய
  • நர பதி - ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவினால்
  • பரிக்லிப்தம் - ஏற்படுத்தப்பட்ட
  • ஸூல்கம் - வித்யா சுல்கத்தை
  • ஆதாதுகாம - க்ரஹிப்பதற்கு ஆசை உள்ளவராய்
  • ஸ்வஸுரம் - மாமனாரும்
  • அமர - தேவதைகளால்
  • வந்த்யம் - ஸ்தோத்ரம் செய்வதற்கு தக்கவரும்
  • ரங்க நாதஸ்ய - ஸ்ரீ ரெங்க அதிபனுக்கு
  • ஸாஷாத் - பிரத்யஷமாய்
  • த்விஜகுல - ப்ராஹ்மண வம்சத்துக்கு
  • திலகம் - அலங்கார பூதருமாகிய
  • தம் விஷ்ணு சித்தம் - அந்த பெரியாழ்வாரை
  • நமாமி – சேவிக்கிறேன்

ஒரு குருவின் மூலமாகக் கற்காமல், திருமாலாலே நேராக (மயர்வற மதிநலம்) தெளிவான ஞானமும் பக்தியும் அருளப் பெற்ற விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார், மதுரையில், ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவின் ஸபையில் நடக்கும் வித்வான்களின் கோஷ்டியில் அங்கே இருக்கும் பரிசான பொற் கிழியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெரும் கோயில் உடையான் எம்பெருமானுக்கு ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்று, எல்லா வேதங்களையும் எடுத்துரைத்து, அப்பரிசை வென்றார். மேலும் ஸ்ரீரங்கநாதனுக்குத் தன் திருமகளாரான ஆண்டாளை மணமுடித்துக் கொடுத்து, நித்ய ஸூரிகளாலும் எம்பெருமானுக்கு மாமனார் என்று வணங்கப்பட்டார். அந்தணர் குலத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். இப்படிப்பட்ட பெரியாழ்வாரை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment