About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 6

பீ⁴ஷ்ம த்³ரோண தடா ஜயத்³ரத² ஜலா, 
கா³ந்தா⁴ரனீ லோத் பலா
ஸல்ய க்³ராஹ வதீ க்ருபேண வஹனீ, 
கர்ணேன வேலா குலா|
அஸ்வத்தா²ம விகர்ண கோ⁴ர மகரா 
து³ர்யோத⁴னா வர்தினீ
ஸோத் தீர்ணா க²லு பாண்ட³வை꞉ 
ரணனதீ³ கைவர்தக꞉ கேஸவ꞉||

பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப் போர். இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது. இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப் படுகிறது. இதில், கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப் படுத்துவதால், பீஷ்மரும் துரோணரும் கரைகள். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன் தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம். அவனை நதியின் நீர் என்று கூறுகிறார். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும். அதனால் சகுனி நீல தாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். சல்லியன் முதலையாகவும், கிருபர் நதியின் வேகமாகவும், கர்ணன் அந்த நதியின் அலை போலவும், அஸ்வத்தாமன், விகர்ணன் இவர்கள் சுறா மீன்கள் எனவும் உருவகப்படுத்தப் பட்டுள்ளார்கள். துரியோதனன் நீர்ச் சுழலுக்கு ஒப்பானவன். ஏனென்றால் அவன் தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக் கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது, பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது. கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம் பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்கு உதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment