About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 4

ஸர்வோ பனிஷதோ³ கா³வோ, 
தோ³க்³தா⁴ கோ³பால னந்த³ன꞉|
பார்தோ² வத்ஸ꞉ ஸுதீ⁴ர் போ⁴க்தா, 
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக, அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது. உபநிஷத்துக்களின் பொருள் எல்லோராலும் அறியக் கூடியதன்று. அதனால் எல்லையற்ற கருணையுடன் பகவான் அவற்றின் சாரத்தை கீதை என்கிற பாலின் மூலம் எல்லோரும் பருகும்படி செய்தான். பால் குழந்தையிலிருந்து முதியோர் வரை எல்லோராலும் எளிதில் ஜீரணிக்கப் படுகிறதல்லவா?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment