About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 10 November 2023

திவ்ய ப்ரபந்தம் 55 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 55 - அஞ்சன வண்ணனோடு ஆடு
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

என் சிறுக்குட்டன்* 
எனக்கோர் இன்னமுது எம்பிரான்*
தன் சிறுக் கைகளால்* 
காட்டிக் காட்டி அழைக்கின்றான்*
அஞ்சன வண்ணனோடு* 
ஆடலாட உறுதியேல்*
மஞ்சில் மறையாதே* 
மா மதீ! மகிழ்ந்து ஓடி வா!

  • என் சிறுக்குட்டன் - என் அருமை மகனான கண்ணன்  
  • எனக்கு ஓர் -  தாயாகிய எனக்குக் கிடைக்கப் பெற்ற ஓர்
  • இன் அமுது - இனிய தெவிட்டாத மதுரமான 
  • எம்பிரான் - அம்ருதம் போன்றவன்
  • தன் சிறு கைகளால் - தன்னுடைய சிறிய கைகளால் 
  • காட்டிக் காட்டி - எப்பொழுதும் உன்னையே காட்டி காட்டி 
  • அழைக்கின்றான் - கூப்பிடுகிறான் 
  • அஞ்சனம் வண்ணனோடு - மை போன்ற கருமை வண்ணம் கொண்ட வடிவை உடைய இந்த கண்ணபிரானோடு 
  • ஆடல் ஆட - விளையாட 
  • உறுதியேல் - நினைத்தாய் என்றால் 
  • மஞ்சில் - மேகத்திலே 
  • மறையாது - நுழைந்து மறையாமல் 
  • மகிழ்ந்து ஓடிவா - ஆவலுடன் மகிழ்ந்து ஓடி வா

என்னுடைய இந்த சிறிய பாலகன், எனக்குக் கிடைக்கப் பெற்ற ஓர் இனிய தெவிட்டாத மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவன்; என்னுடைய அவன்; அமுதம் போல் இனிமையானவனும், என் தலைவன், என் அருமைப் புதல்வன் கண்ணன் தன் சிறு கைகளால் உன்னை காட்டி காட்டி அழைக்கிறான். அழகிய சந்திரனே! மை போன்ற கருமை வண்ணம் கொண்ட திருமேனி உடைய கண்ணனோடு விளையாடுவதற்கு நீ நினைத்தேயானால், மேகத்தில் நுழைந்து மறையாமல், ஆவலுடன் ஓடி வா!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment