About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 10 November 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.9 

ஸஞ்ஜய உவாச।
ஏவ முக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் 
கு³டா³ கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³ம்
உக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ||

  • ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொல்லுகிறார் 
  • ஏவம் - இவ்வாறு 
  • உக்த்வா - சொல்லி 
  • ஹ்ருஷீகேஸ²ம் - புலன்களின் அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணரிடம் 
  • கு³டா³கேஸ²ஃ - உறக்கத்தை வென்றவன்
  • அர்ஜுநன் பரந்தபஹ - எதிரிகளைச் தவிக்கச் செய்பவன் 
  • ந யோத்ஸ்யே - போரிட மாட்டேன் 
  • இதி - இவ்வாறு 
  • கோ³விந்த³ம் - புலன்களுக்கு இன்பம் அளிப்பவரான கிருஷ்ணரிடம் 
  • உக்த்வா - சொல்லி 
  • தூஷ்ணீம் - அமைதி 
  • ப³பூ⁴வ - ஆகி விட்டான் 
  • ஹ – நிச்சயமாக

ஸஞ்ஜயன் கூறுகிறார்: இவ்வாறு கூறிய பின், அறியாமையை வென்றவனும், எதிரிகளையும் தவிக்கச் செய்பவனான அர்ஜுநன், கோவிந்தா, நான் போரிட மாட்டேன், என்று கூறி அமைதியாகி விட்டான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment