About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 1 February 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.35

ஏவம் ஜந்மாநி கர்மாணி 
ஹ்யகர் துர் அஜ நஸ்ய ச|
வர்ண யந்திஸ் மக வயோ 
வேத³ கு³ஹ்யாநி ஹ்ருத் பதே:||

  • ஏவம் - இவ்வாறு
  • அஜ நஸ்ய ஹி  - பிறப்பே இல்லாதவரும்
  • ஹ்ருத் பதேஹே -   ஸர்வ ஜீவனுக்கும் அந்தர்யாமியுமான
  • ஜந்மாநி -  ஜென்மாக்களையும்
  • அயகர் துர் -   எந்தவித வியாபாரமும் இல்லாதவர்க்கு
  • கர்மாணி ச - வியாபாரங்களையும்
  • கவயோ - கவிகள்
  • வேத³ கு³ஹ்யாநி -   வேதத்தில் ரஹஸ்யமாக கூறப்பட்டவைகளாக 
  • வர்ண யந்தி ஸ்ம -  வர்ணிக்கின்றனர்

சகல ஜீவராசிகளிலும் உட்புகுந்து விளங்கும் பிறப்பில்லாத பகவானுக்கு 'அவதாரம்' என்று பிறவியையும், ஒன்றும் செய்யாமல் சாட்சியாக பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு 'அவதார லீலைகள்' என்று கர்மங்களையும் சொல்வது, 'வேதங்களில் அடங்கிய பரம ரகசியம்' என்று கவிகள் வர்ணிக்கின்றனர். அதாவது, ஜீவனுக்குப் பிறப்பு முதலியன உண்டென்று சொல்வது போல, பரமாத்மாவுக்கு அவதாரமும் அவதார லீலைகளும், மாயையே தவிர வேறில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment