||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
023. திருதேரழுந்தூர்
திருவழுந்தூர் - மாயவரம்
இருபத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ தேவாதிராஜன் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஆமருவியப்பன் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: தேவாதிராஜன்
- பெருமாள் உற்சவர்: ஆமருவியப்பன்
- தாயார் மூலவர்: செங்கமலவல்லி
- திருமுக மண்டலம் திசை: கிழக்கு
- திருக்கோலம்: நின்ற
- புஷ்கரிணி: தர்சன
- தீர்த்தம்: காவிரி
- விமானம்: கருட
- ப்ரத்யக்ஷம்: காவேரி, தர்ம தேவதை, அகஸ்தியர், கருடன்
- ஆகமம்: பாஞ்சராத்திரம்
- ஸம்ப்ரதாயம்: வட கலை
- மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 45
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
இத்தலத்தில் மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாஸாஸநம் செய்துள்ளார். கிழக்கு பார்த்து அமைந்த இந்த கோயிலுக்கு நேர் எதிரில் மேற்கு பார்த்த சிவன் கோயில் உள்ளது. அங்கு தான் இவர்கள் சொக்கட்டான் ஆடிய மண்டபம் உள்ளது. ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு சாதகமாக கூற, சிவனுக்கு கோபம் வந்து பசுவாக மாறும் படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்கு சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராக பெருமாள் 'ஆ'மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சி செய்கிறார். கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர்.
உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேர் வரும் போது, அதன் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகி விடும்படி வரம் பெற்றிருந்தான். இவன் மேலே சென்ற போது அதன் நிழல் கண்ணனின் மீதும் அவர் மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது. பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன். அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார். மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் 'தேரெழுந்தூர்' ஆனது.
ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைர முடியையும் கொடுத்து, "108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதை கொடுத்து விடு" என்றான். அதன் படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்து விட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கு விமானத்தை கொடுத்தார் கருடன். இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது. அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது. பெரும்பாலான கோயில்களில் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment