||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 55
ஜீவோ விநயிதா ஸாக்ஷீ
முகுந்தோ³ மித விக்ரம:|
அம்போ⁴ நிதி⁴ர நந்தாத்மா
மஹோ த³தி⁴ ஸ²யோந் தக:||
- 515. ஜீவோ - வாழ வைப்பவர். வாழ்க்கையைத் தாங்குபவர். உடலின் வடிவத்தில் உயிரை ஆதரிக்கிறார்.
- 516. விநயிதா - காப்பவர். இரட்சகர்.
- 517. ஸாக்ஷீ - பார்த்துக் கொண்டிருப்பவர். நம்மைப் பாதுகாக்க ஒரு பார்வையாளராக இருக்கிறார். சாக்ஷியாக அவர் நம் அனைவருக்குள்ளும் வசிக்கிறார். அவர் ஒரு அந்தர்யாமி.
- 518. முகுந்த³ - முக்தி அளிப்பவர்.
- 519. அமித விக்ரமஹ - அளவற்ற ஆற்றலை உடையவர். வரம்பற்ற சக்தியும் வலிமையும் உடையவர்.
- 520. அம்போ⁴ நிதி⁴ர் - நீருக்குள் ஆமை வடிவில் உலகை ஆதரித்தார். (கூர்ம அவதாரம்)
- 521. அநந்தாத்மா - அநந்தன் என்கிற பாம்பு வடிவமாக இருந்து, அதன் ஆத்மாவாக உலகங்களைத் தலை மேல் தாங்குபவர். அநந்தாவின் உள் ஆன்மா.
- 522. மஹோ த³தி⁴ஸ்² - பரந்து காணப்படும் மகா சமுத்திரத்தின் மேல் உறங்கிக் கொண்டிருப்பவர்.
- 523. அந்தகஹ - அனைத்து உயிரினங்களின் முடிவையும் கொண்டு வருபவர். எல்லாவற்றையும் விழுங்கி, பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க பொருத்தமான நேரத்திற்காகக் காத்திருக்கும் யோக நித்ரா வடிவத்தை ஏற்றுக் கொள்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment