||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 54
ஸோம போம்ருதப: ஸோம:
புருஜித் புரு ஸத்தம:|
விநயோ ஜய: ஸத்ய ஸந்தோ⁴
தா³ஸா²ர் ஹ: ஸாத் வதாம் பதி:||
- 505. ஸோமப - அவர் யக்ஞங்களின் ஸோம ரச பானம் அருந்துபவர்.
- 506. அம்ருதபஸ் - அமுதம் அல்லது அமிருதத்தை அருந்துபவர்.
- 507. ஸோமஃ - அமுதிலும் இனியவர். அவர் பக்தர்களுக்கு அமிர்தம் போல இனிமையாக இருக்கிறார்.
- 508. புருஜித் - யாவரையும் வெற்றி கொண்டு வசப்படுத்துபவர். தனது வீரம் மற்றும் வசீகரம் இரண்டிலும் அனைவரையும் வென்றவர்.
- 509. புரு ஸத்தமஹ - சான்றோர்களிடம் நிலைத்திருப்பவர். தனது பிரபஞ்ச வடிவத்துடன் அனைவரிலும் சிறந்தவர்.
- 510. விநயோ - தண்டித்துத் திருத்துபவர். அனைத்தையும் அடக்கி வெற்றி பெறுகிறார்.
- 511. ஜயஸ் - தன்னை அண்டியவர்களிடம் தோற்று, அவர்களுக்கு வெற்றியை அளிப்பவர்.
- 512. ஸத்ய ஸந்தோ⁴ - வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதி உடையவர். அவருடைய வார்த்தைக்கு ஒரு போதும் பின் வாங்குவதில்லை.
- 513. தா³ஸா²ர் ஹஸ் - அடியவர்கள் இவனிடம் தமது ஆத்மாவைச் சமர்ப்பிப்பதற்கு உரியவர். நமது காணிக்கைகளுக்கும் வரங்களுக்கும் மிகவும் தகுதியானவர்.
- 514. ஸாத் வதாம் பதிஹி - ஸாத்வீக குணமுடைய பாகவதர்களுக்குத் தலைவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment