About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 12 October 2023

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 7
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

ய: கர்ணாஞ்சலி ஸம்புடை: அஹரஹ: 
ஸம்யக் பிப³த்யா த³ராத்³
வால்மீகே: வத³நாரவிந்த³ க³லிதம் 
ராமாயணாக்²யம் மது⁴|
ஜந்ம வ்யாதி⁴ ஜரா விபத்தி மரணை: 
அத்யந்த: ஸோபத்³ரவம்
ஸம்ஸாரம் ஸ விஹாய க³ச்ச²தி 
புமாந் விஷ்ணோ: பத³ம் ஸா²ஸ்²வதம்||

  • ய: - எவனொருவன்
  • அஹரஹ: - தினம் தினம்
  • கர்ணாஞ்சலி ஸம்புடைர் - செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால்
  • வால்மீகேர் - வால்மீகியினுடைய
  • வத³நாரவிந்த³ க³லிதம் - வாக்கிலிருந்து (கிளியின் வாயிலிருந்து விழுவதைப் போல்)
  • ராமாயணாக்²யம் மது⁴ - ராமாயணம் என்னும் தேனை
  • ஸம்யக் - நன்றாக
  • ஆத³ராத்³ - ஆவலுடன்
  • பிப³தி - பருகுகிறானோ
  • ஸ: புமாந் - அந்த மனிதன்
  • ஜந்ம வ்யாதி⁴ ஜரா விபத்தி மரணைர் - பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால்
  • அத்யந்தஸ் ஸோபத்³ரவம் - மிகவும் தொல்லை கொடுக்கும்
  • ஸம்ஸாரம் - சம்சாரத்தை
  • விஹாய - நீத்து
  • ஸா²ஸ்²வதம் - நிரந்தரமான
  • விஷ்ணோஃ பத³ம் - விஷ்ணுவின் பதத்திற்கு
  • க³ச்ச²தி - செல்கிறான்

எவனொருவன் தினம் தினம் செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால் வால்மீகியினுடைய வாக்கிலிருந்து (கிளியின் வாயிலிருந்து விழுவதைப் போல்) ராமாயணம் என்னும் தேனை நன்றாக ஆவலுடன் பருகுகிறானோ அந்த மனிதன் பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால் மிகவும் தொல்லை கொடுக்கும் ஸம்சாரத்தை
நீத்து, நிரந்தரமான விஷ்ணுவின் பதத்திற்கு செல்கிறான்

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment