About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 12 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 28

வ்ருஷாஹீ வ்ருஷபோ⁴ விஷ்ணுர் 
வ்ருஷ பர்வா வ்ருஷோ த³ர:|
வர்த்த⁴நோ வர்த்த⁴ மாநஸ்² ச 
விவிக்த: ஸ்²ருதி ஸாக³ர:||

  • 257. வ்ருஷாஹீ - அடையும் நாள் நல்ல நாளாக இருப்பவன்.
  • 258. வ்ருஷபோ⁴ - கருணையைப் பொழிபவன்.
  • 259. விஷ்ணுர் - எங்கும் பரந்திருப்பவன்.
  • 260. வ்ருஷ பர்வா - தருமமென்னும் படிகளால் அடையத்தக்கவன்.
  • 261. வ்ருஷோ த³ரஹ - தருமமே உருவான வயிற்றை உடையவன்.
  • 262. வர்த்த⁴நோ - வழிபடுவோரை வளர்ப்பவன்.
  • 263. வர்த்த மாநஸ்² ச - வளர்ச்சி அடைபவன்.
  • 264. விவிக்தஸ்² - உலகில் யாரையும் விடத் தனிச் சிறப்புடையவன்.
  • 265. ஸ்²ருதி ஸாகரஹ - வேதக்கடல், வேத முடிவானவன்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment