||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 43 – திருப்பாதாதி கேசம் அடியும் முடியும்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - இருபத்தி ஒன்றாம் பாசுரம்
தரவு கொச்சகக் கலிப்பா
சுருப்பார் குழலி*
யசோதை முன் சொன்ன*
திருப்பாத கேசத்தைத்*
தென் புதுவைப் பட்டன்*
விருப்பாலுரைத்த*
இருபதோடொன்றும் உரைப்பார் போய்*
வைகுந்தத்து ஒன்றுவர் தாமே| (2)
- சுருப்பார் - வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய
- குழலி - கூந்தலை உடையளான
- அசோதை - யசோதைப் பிராட்டியால்
- முன் - க்ருஷ்ணாவதார ஸமயத்திலே
- சொன்ன - சொல்லப்பட்ட
- திருப்பாத கேசத்தை - திருவடி முதல் திருமுடி வரையில் உள்ள அழகினைக் காட்டிய வர்ணனைப் பாசுரங்களை
- தென் புதுவை பட்டன் - அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார்
- விருப்பால் - மிக்க விருப்பத்தோடு
- உரைத்த - அருளிச் செய்த
- இருபதோடு ஒன்றும் - இந்த இருபத்தோரு பாட்டுக்களையும்
- உரைப்பார் தாம் - கற்பவர்கள்
- போய் - இம்மண்டலத்தைக் கடந்து போய்
- வைகுந்தத்து - ஸ்ரீ வைகுண்டத்திலே
- ஒன்றுவர் - பொருந்தப் பெறுவார்கள்
வண்டுகள் அமர்ந்து தேனுண்டு ஆர்ப்பரிக்கும் மலர்களைச் சூடிய கூந்தலை உடைய யசோதை அன்னை, குழந்தை கண்ணனின் திருவடி முதல் திருமுடி வரை அன்று சொல்லி மகிழ்ந்ததை, திருவில்லிப்புத்தூர் வாழும் கவிஞனான, விட்டுசித்தன், குழந்தை கண்ணபெருமான் மேல் கொண்ட அதீத அன்பினால் அவற்றை இந்த இருபத்திஒரு பாடல்களிலும் தந்துள்ளவற்றை, முழு விருப்பத்துடன் மனதாற பாடுபவர்கள், நிச்சயம் இவ்வுலகை விட்டுப் போய், இறைவனின் திருவடி நிலையான வைகுந்த நிலையை அடைந்து என்றும் வாழ்வாங்கு வாழ்வர்.
அடிவரவு: சீத முத்தும் பணை உழ பிறங்கிய மத்தம் இருங்கை வந்து அதிரும் பெருமா நாள் மை* வண்டமர் எந்தொண்டை நோக்கி விண் பருவம் மண் முற்றில் அழகிய கருப்பார் - மாணிக்கம்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment