||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்ரிவக்ராவுடன் ஒரு சந்திப்பு|
கிருஷ்ணனும் பலராமனும் நடப்பதை தொடர்ந்தனர், கம்சனின் மாளிகை வழியாக சென்றனர். ஒரு பெண் இவர்கள் எதிரில் ஒரு பாத்திரம் முழுவதும் அறைத்த சந்தனத்தை கொண்டுவந்தாள். அதன் வாசனை அந்த இடம் முழுவதும் பரவியது. அந்த பெண் இளமையாகவும் அழகாகவும் இருந்தாள், ஆனால் அவன் முதுகு கூன் விழுந்திருந்தது. கிருஷ்ணன் அவளை பார்த்து, "அழகிய பெண்ணே, நீ யார்? இந்த சந்தனத்தை யாருக்கு கொண்டு செல்கிறாய்? கொஞ்சம் எங்களுக்கும் தருவாயா?" என்று கேட்டார்.
அவள் கம்சன் மாளிகையில் வேலை செய்யும் பெண், கிருஷ்ணனின் வார்த்தைகளில் மயங்கினாள். கிருஷ்ணனிடம் "ஐயா, எனது பெயர் த்ரிவக்ரா. நான் வாசனை திரவியம் செய்பவள். எனது இந்த திறமைக்காக கம்சன் என்னை ஆதரித்து உள்ளார், நான் செய்த இந்த வாசனை திரவியம் அரசருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த களிம்பை உங்களுக்கு நான் தருகிறேன், உங்களை தவிர வேறு யாருக்கும் இந்த களிம்பை பெற தகுதி இல்லை." சந்தன களிம்பை கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் தந்து மகிழ்ந்தாள்.
அவர்கள் இருவரும் அதை மார்பிலும், கைகளிலும், கழுத்திலும் பூசிக் கொண்டனர். கிருஷ்ணன் அவரது கருணையை அவரை போற்றுபவர்களுக்கு வாரி வழங்குவார். அவளது கூன் விழுந்த முதுகை மூன்று இடத்தில் வளைத்து சரிசெய்தார். அவளின் கால்கள் மீது இவர் கால் வைத்து, அவள் கன்னத்தை இரண்டு விரல்களால் பிடித்து கொண்டு, அவள் முகத்தை விரல்களால் இழுத்தார். அவள் உடல் தேறியது. அவள் கூன் சரி ஆகி அழகான பெண்ணாக மாறினாள். கிருஷ்ணருக்கு நன்றிகளை கூறி அவர்களிடமிருந்து விடைப் பெற்றாள்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment