||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.28
வாஸுதே³வ பரா வேதா³
வாஸுதே³வ பரா மகா²:|
வாஸுதே³வ பரா யோகா³
வாஸுதே³வ பரா க்ரியா:||
- வேதா³ - மறைகள் யாவும்
- வாஸுதே³வ பரா - வாஸுதேவனையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றன
- மகா²ஹ - யாகங்கள் யாவும்
- வாஸுதே³வ பரா - வாஸுதேவனையே பலமாகக் கொண்டவை
- யோகா³ - யோக சாஸ்திரங்களும்
- வாஸுதே³வ பரா - வாஸுதேவனையே குறிக்கின்றன
- க்ரியாஹ - கர்மாக்கள் யாவும்
- வாஸுதே³வ பரா - வாஸுதேவனையே பிரயோஜனமாக உடையவை
மறைகள் யாவும் வாசுதேவனான பகவானைப் பற்றியவைகள். யாகங்களும் பகவானையே சார்ந்தவைகள். யோக சாஸ்திரங்களும் அப்படிய, கர்மங்களும் வாசுதேவனை அடைவதையே பயனாகக் கொண்டவை.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment