About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 31 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 66

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 36

ஸ்கந்த: ஸ்கந்த தரோ துர்யோ 
வரதோ வாயு வாஹந:|
வாசுதேவோ ப்ருஹத் பாநு 
ராதிதேவ: புரந்தர:||

  • 328. ஸ்கந்தஸ் - வற்றச் செய்பவன்.
  • 329. ஸ்கந்த தரோ - அசுரர்களை அழித்த தேவ சேனாதிபதியைத் தாங்குபவன்.
  • 330. துர்யோ - தாங்குபவன்.
  • 331. வரதோ - வரங்களைத் தருபவன்.
  • 332. வாயு வாஹநஹ - வாயுவை நடத்திச் செல்பவன்.
  • 333. வாஸுதேவோ - வாசுதேவன், எங்கும் வசிப்பவன்
  • 334. ப்ருஹத் பாநுர் - மிக்க ஒளியையுடையவன்.
  • 335. ஆதிதேவஃ - ஊழி முதல்வன்.
  • 336. புரந்தரஹ - அசுரர்களின் இருப்பிடங்களை பிளப்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.3 

க்லை ப்³யம் மாஸ்ம க³ம: பார்த² 
நைதத் த்வய் யுப பத்³யதே|
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர் ப³ல்யம் 
த்யக்த் வோத்திஷ்ட² பரந்தப||

  • க்லை ப்³யம் - ஆண்மையின்மை
  • மா ஸ்ம - இல்லை 
  • க³மஃ - அடைதல் 
  • பார்த² - பிருதாவின் மைந்தனே 
  • ந - ஒருபோதும் இல்லை 
  • ஏதத் - இதுபோல 
  • த்வயி - உனக்கு 
  • உப பத்³யதே - பொருத்தமானதல்ல 
  • க்ஷுத்³ரம் - அற்பமான 
  • ஹ்ருத³ய - இதயம் 
  • தௌ³ர் ப³ல்யம் - பலவீனம் 
  • த்யக்த்வா - விட்டுவிட்டு
  • உத்திஷ்ட² - எழுவாய்
  • பரந்தப - எதிரிகளை தவிக்கச் செய்பவனே

பிருதாவின் மகனே, இது போன்ற கோழைத் தன்மையை, ஒரு போதும் அடையாதே. இது உனக்கு பொருத்தமானதல்ல. எதிரிகளை தவிக்கச் செய்பவனே, அற்பமான இதய பலவீனத்தை கைவிட்டு, எழுவாயாக. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.1

ஸூத உவாச|
ஜக்³ருஹே பௌருஷம் ரூபம் 
ப⁴க³வாந் மஹதா³ தி³பி⁴:|
ஸம்பூ⁴தம் ஷோட³ஸ² கலம் 
ஆதௌ³ லோக ஸிஸ்ரு க்ஷயா||

  • ப⁴க³வாந் - இறைவனான வாஸுதேவன்
  • லோக ஸிஸ்ரு க்ஷயா - உலகத்தை படைக்க வேண்டும் என்ற விருப்பத்தால்
  • ஆதௌ³ - முதலில் 
  • மஹதா³ தி³பி⁴ஹி ஸம்பூ⁴தம் - மஹத், அஹங்காரம் என்ற பஞ்சதன் மாத்ரைகளோடு கூடியதும்
  • ஷோட³ஸ² கலம் - பதினாறு கலைகளோடு கூடியதுமான 
  • பௌருஷம் ரூபம் - விராட் ஸ்வரூபத்தை 
  • ஜக்³ருஹே - எடுத்துக் கொண்டார்

ஸூதர் கூறுகிறார் - பகவான் வாஸுதேவன் முதன் முதலில் இவ்வுலகத்தைப் படைக்கக் கருதி, மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், பதினாறு கலைகள் அடங்கிய விராட் புருஷ திருவுருவை மேற்கொண்டார்.

பதினாறு கலைகளாவன: அறிப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, ஐம்பூதங்கள் மற்றும் மனது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.1
 
தப: ஸ்வாத்⁴யாய நிரதம் 
தபஸ்வீ வாக்³விதா³ம் வரம்|
நாரத³ம் பரிபப்ரச்ச² 
வால்மீகிர் முநி புங்க³வம்||

  • தபஸ் - தபஸ்
  • ஸ்வாத்⁴யாய - வேதாத்யயனம் இவைகளை
  • நிரதம் - எப்பொழுதும் செய்கின்றவரான
  • வாக்³விதா³ம் - வேதம் அறிந்தவர்களுள்
  • வரம் - உத்தமரான
  • முநி - முனிவர்களில் 
  • புங்க³வம் - சிறந்தவரான
  • நாரத³ம் - நாரதரை 
  • தபஸ்வீ - தபஸ்வியான
  • வால்மீகிர் - வால்மீகி முனிவர் 
  • பரிபப்ரச்ச² - ப்ரச்னம் செய்தார்

தவத்திலும், வேத கல்வியிலும் ஆழமாக ஈடுபடுபவரும், உரையாடுபவர்களில் சிறந்தவரும், முனிவர்களில் உயர்ந்தவருமான நாரதரிடம், தவசி வால்மீகி கேட்டார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 49 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.6

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 49 - வருணன் கொடுத்த கை வளையல்களும் சாதிப் பவளமும்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

ஓதக் கடலின்* 
ஒளி முத்தின் ஆரமும்* 
சாதிப் பவளமும்* 
சந்தச் சரி வளையும்*
மாதக்கவென்று
வருணன் விடு தந்தான்* 
சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ* 
சுந்தரத் தோளனே! தாலேலோ|

  • ஓதம் - ஓலியுடன்அலை வீசும் 
  • கடலில் - ஸமுத்ரத்தில் உண்டான
  • ஒளி - ஒளி பொருந்திய
  • முத்தின் - முத்துக்களால் கோக்கப்பட்ட
  • ஆரமும் - ஹாரத்தையும்
  • சாதி - நல்ல ஜாதியில் உண்டான
  • பவளமும் - பவழ வடத்தையும்
  • சந்தம் - அழகு பொருந்திய
  • சரி வளையும் - முன் கை வளைகளையும்
  • மா தக்க என்று - விலை மதிக்கத் தக்கவை என்று
  • வருணன் - வருண தேவன் அனுப்பி இருக்கிறான் 
  • சோதி சுடர் - மிக்க ஒளி மிகுந்த 
  • முடியாய் - கிரீடத்தை ணிந்த கண்ணனே! 
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 
  • சுந்தரம் தோளனே - அழகிய திருத்தோள்களை டையவனே!
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

அலை மோதும் சமுத்திரத்திலிருந்து எடுக்கப்பட்டதும், ஒளிபடர்ந்த முத்துக்களால் கோக்கப்பட்டதுமான மாலையையும், நல்ல ஜாதிப் பவளத்தாலான அழகான கை, தோள் வளயல்களையையும், விலை மதிப்பில்லாதவை இவை எனக் கருதி வருணன் உனக்கு அனுப்பியிருக்கிறான், மிக்க பிரகாசமுடைய திருமுடியையுடைய கண்ணனே கண்ணுறங்கு, அழகிய தோள்களையுடைய கண்ணனே கண்ணுறங்கு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 1

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1078 - நால்வகைத் திருக்கோலம் கொண்டவன் இடம்
பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது* 
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* 
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்* 
மா மலை ஆவது நீர்மலையே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1329 - இந்தளூராய்! இரக்கம் காட்டு
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே* மருவினிய மைந்தா*  
அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே* 
நந்தா விளக்கின் சுடரே* நறையூர் நின்ற நம்பீ* 
என் எந்தாய் இந்தளூராய்* அடியேற்கு இறையும் இரங்காயே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1470 - திருநறையூர்த் தேனே! நின்னை அடைந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மான் ஏய் நோக்கு நல்லார்* மதி போல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்* 
கோனே குறுங்குடியுள் குழகா* திருநறையூர்த் தேனே* 
வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1478 - கிழப்பருவம் வருமுன் திருநறையூர் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - முதலாம் பாசுரம்
கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளை வந்து ஏங்கினால்*
பண் இன் மொழியார்* பைய நடமின் என்னாத முன்*
விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியும் ஆயினான்*
நண்ணு நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1479 - மனமே! விரைவில் திருநறையூர் தொழு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - இரண்டாம் பாசுரம்
கொங்கு உண் குழலார்* கூடி இருந்து சிரித்து* 
நீர் இங்கு என் இருமி* எம்பால் வந்தது? என்று இகழாத முன்*
திங்கள் எரி கால்* செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*
நங்கள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1480 - முதுமை கண்டு பலர் சிரிப்பர்; விரைவில் தொழு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - மூன்றாம் பாசுரம்
கொங்கு ஆர் குழலார்* கூடி இருந்து சிரித்து* 
எம்மை எம் கோலம் ஐயா* என் இனிக் காண்பது? என்னாத முன்*
செங்கோல் வலவன்* தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்* 
நம் கோன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1481 - நறையூர் நம்பனை இப்பொழுதே தொழு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - நான்காம் பாசுரம்
கொம்பும் அரவமும்* வல்லியும் வென்ற நுண் ஏர் இடை*
வம்பு உண் குழலார்* வாசல் அடைத்து இகழாத முன்*
செம் பொன் கமுகு இனம் தான்* கனியும் செழும் சோலை சூழ்*
நம்பன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1482 - மனமே! விலை மகளிர் இகழுமுன் நறையூர் தொழு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - ஐந்தாம் பாசுரம்
விலங்கும் கயலும் வேலும்* ஒண் காவியும் வென்ற கண்*
சலம் கொண்ட சொல்லார்* தாங்கள் சிரித்து இகழாத முன்*
மலங்கும் வராலும்* வாளையும் பாய் வயல் சூழ் தரு*
நலம் கொள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1483 - மனமே! தாமதியாமல் நறையூர் தொழு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - ஆறாம் பாசுரம்
மின் நேர் இடையார்* வேட்கையை மாற்றியிருந்து*
என் நீர் இருமி* எம்பால் வந்தது? என்று இகழாத முன்*
தொல் நீர் இலங்கை மலங்க* விலங்கு எரி ஊட்டினான்*
நல் நீர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1484 - பிறர் பரிகாசம் செய்யும் முன் நறையூர் தொழு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - ஏழாம் பாசுரம்
வில் ஏர் நுதலார்* வேட்கையை மாற்றிச் சிரித்து* 
இவன் பொல்லான் திரைந்தான் என்னும்* புறன் உரை கேட்பதன் முன்*
சொல் ஆர் மறை நான்கு ஓதி* உலகில் நிலாயவர்*
நல்லார் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1485 - நரை திரை மூப்பு வருமுன் நறையூர் தொழு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - எட்டாம் பாசுரம்
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்* மதனன் என்றார் தம்மை*
கேள்மின்கள் ஈளையோடு* ஏங்கு கிழவன் என்னாத முன்*
வேள்வும் விழவும்* வீதியில் என்றும் அறாத ஊர்*
நாளும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

012. திவ்ய ப்ரபந்தம் - 1486 - நெஞ்சே! உடனே நறையூர் தொழு
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - ஒண்பதாம் பாசுரம்
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்* காதன்மை விட்டிட*
குனி சேர்ந்து உடலம்* கோலில் தளர்ந்து இளையாத முன்*
பனி சேர் விசும்பில்* பால்மதி கோள் விடுத்தான் இடம்*
நனி சேர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|

013. திவ்ய ப்ரபந்தம் - 1487 - இவற்றைப் படிப்போர் தேவர்க்கு அரசாவர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி  - பத்தாம் பாசுரம்
பிறை சேர் நுதலார்* பேணுதல் நம்மை இலாதமுன்*
நறை சேர் பொழில் சூழ்* நறையூர் தொழு நெஞ்சமே என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர் கோன்* கலிகன்றி சொல்*
மறவாது உரைப்பவர்* வானவர்க்கு இன் அரசு ஆவரே|

014. திவ்ய ப்ரபந்தம் - 1488 - கடல் கடைந்தவன் ஊர் திருநறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கலங்க முந்நீர் கடைந்து* அமுதம் கொண்டு* 
இமையோர் துலங்கல் தீர* நல்கு சோதிச் சுடர் ஆய*
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்* உடையான் ஊர்* 
நலம் கொள் வாய்மை* அந்தணர் வாழும் நறையூரே|

015. திவ்ய ப்ரபந்தம் - 1489 - நரசிங்கமாக அவதரித்தவன் ஊர் இது
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முனை ஆர் சீயம் ஆகி* அவுணன் முரண் மார்வம்*
புனை வாள் உகிரால்* போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்* 
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்* குயில் கூவும்*
நனை ஆர் சோலை சூழ்ந்து* அழகு ஆய நறையூரே|

016. திவ்ய ப்ரபந்தம் - 1490 - இலங்கையைச் செற்றவன் இருப்பிடம் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட*
சேனைத் தொகையைச் சாடி* இலங்கை செற்றான் ஊர்* 
மீனைத் தழுவி வீழ்ந்து எழும்* மள்ளர்க்கு அலமந்து*
நானப் புதலில்* ஆமை ஒளிக்கும் நறையூரே|

017. திவ்ய ப்ரபந்தம் - 1491 - உரலில் கட்டுண்டவன் உறைவிடம் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம் 
உறி ஆர் வெண்ணெய் உண்டு* உரலோடும் கட்டுண்டு*
வெறி ஆர் கூந்தல்* பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர்* 
பொறி ஆர் மஞ்ஞை* பூம் பொழில்தோறும் நடம் ஆட*
நறு நாள் மலர் மேல்* வண்டு இசை பாடும் நறையூரே|

018. திவ்ய ப்ரபந்தம் - 1492 - மருத மரங்களை முறித்தவன் மன்னும் ஊர் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
விடை ஏழ் வென்று* மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்*
நடையால் நின்ற* மருதம் சாய்த்த நாதன் ஊர்* 
பெடையோடு அன்னம்* பெய்வளையார் தம் பின் சென்று*
நடையோடு இயலி* நாணி ஒளிக்கும் நறையூரே|

019. திவ்ய ப்ரபந்தம் - 1493 - பேய்ச்சி பாலுண்டவன் தங்கும் ஊர் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பகு வாய் வன் பேய்* கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு*
புகு வாய் நின்ற* போதகம் வீழப் பொருதான் ஊர்* 
நெகு வாய் நெய்தல்* பூ மது மாந்திக் கமலத்தின்*
நகு வாய் மலர் மேல்* அன்னம் உறங்கும் நறையூரே|

020. திவ்ய ப்ரபந்தம் - 1494 - சாந்தீபினிக்கு அருள் செய்தவன் அமரும் ஊர் இது
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
முந்து நூலும் முப்புரி நூலும்* முன் ஈந்த*
அந்தணாளன் பிள்ளையை* அஞ்ஞான்று அளித்தான் ஊர்* 
பொந்தில் வாழும் பிள்ளைக்கு* ஆகிப் புள் ஓடி*
நந்து வாரும்* பைம் புனல் வாவி நறையூரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 57

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கௌரவர்களுக்கு அக்ருரரின் அறிவுரை|

அஸ்தினாபுரத்தில் அவர் பெரியவர்களான பீஷ்மர், திருதராஷ்டிரர், விதுரர், குந்திதேவி ஆகியோரைப் பார்த்தார். அவர்களுடன் பேசி அங்குள்ள நிலைமையை நன்கு அறிந்து கொண்டார். துரியோதனன் எப்படி பாண்டவர்களைக் கண்டு பொறாமைப்படுகிறான் என்றும், எப்படிப் பல வழிகளில் அவர்களைத் துன்புறுத்துகிறான் என்றும் விதுரரிடமிருந்து தெரிந்து கொண்டார்.


குந்தியும் அக்ருரை வந்து பார்த்து, மதுராவில் உள்ள தன் உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தாள். அவர்களுடைய புகழ் இவள் காதுக்கும் எட்டியிருந்தது. அவள் உள்ளூறத் தன் மக்களுக்குப் பாதுகாப்பு தர விரும்பினாள். புலிகளுக்கிடையில் சிக்குண்ட பெண்மானைப் போல அவள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். ஏனெனில் பாண்டவர்களைக் கொல்லுவதற்குத் துரியோதனன் திட்டமிட்டுக் கொண்டேயிருந்தான். அவளுடைய கணவர் பாண்டு இறந்த பிறகு, அவளுடைய ஒரே கவலை தன் மக்களைக் காப்பாற்றுவது மட்டும் தான். ஒரு நாள் கிருஷ்ணன் வந்து தங்களைக் காப்பாற்றுவான் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

அஸ்தினாபுர நிலைமையை நன்கு தெரிந்து கொண்ட பின்னர், அக்ருரர் மதுரா திரும்ப நினைத்தார். விடை பெற்றுக் கொள்வதற்காக அக்ருரர் திருதராஷ்டிரனைச் சந்தித்தார், அப்பொழுது அவர் திருதராஷ்டிரனுக்கு ஒரு புத்திமதி கூறினார்---

"அன்புள்ள அரசரே! தாங்கள் நியாயமின்றிப் பாண்டவர்களின் அரசைப் பிடுங்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் தர்மத்திலிருந்து விலகி விட்டீர்கள். பாண்டவர்களை நல்ல முறையில் தாங்கள் நடத்தவில்லை. தாங்கள் இப்படியே நடந்துக் கொண்டால், பாண்டவர்களுக்கும் தாங்கள் பிள்ளைகளுக்குமிடையே நிச்சயமாகச் சண்டை ஏற்படும். பாண்டவர்கள் தர்மத்தின் வழி செல்பவர்கள் ஆதலால், அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள், உங்கள் பிள்ளைகள் கொல்லப்படுவார்கள்" என்று சொன்னார்.

இப்படி அக்ருரர் தீர்க்கதரிசனம் கூறிவிட்டு மதுரா திரும்பினார். அங்குள்ள உண்மையான நிலையைப் பற்றியும் திருதராஷ்டிரனின் கெட்ட எண்ணங்களைப் பற்றியும் கிருஷ்ணனிடம் விளக்கமாகக் கூறினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி மூன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

063 அருள் ஆழங்கண்டேனோ நல்லானைப் போலே|

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் பரம பக்தன் அந்தணன் ஒருவன் காவிரி ஓடும் ஒரு ஊரின் நதிக்கரையில் வசித்து வந்தான்.

ஒருநாள், அவன் காவிரியில் நீராடிக் கொண்டிருந்த போது சடலம் ஒன்று நதியில் மிதந்து வருவதைப் பார்த்தான்.


அந்த சடலத்தின் தோள் பட்டையில் சங்கு, சக்கரம் ஆகியவை இருந்ததால், அது ஒரு வைஷ்ணவனின் சடலம் என, அதை எடுத்து இறுதிச் சடங்குகளை அவனே செய்தான்.

அந்த ஊர் மக்களுக்கு அது பிடிக்கவில்லை, அந்த சடலம் ஒரு தாழ்ந்த சாதி ஒருவனுடையது என்றும், அதற்கு இறுதிச் சடங்கை அந்தணனான அவன் செய்ததால், அவனை சாதியை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

அந்த அந்தணன், எம்பெருமானிடம், அவ்வூர் மக்களைத் திருத்தும் படி வேண்டினான்.

அடுத்த நாள் ஊர் மக்கள் கூடியிருந்த கோயிலில், எம்பெருமான் மக்களுக்கு, அந்த சடலம் ஒரு வைஷ்ணவருடையது அல்ல என்றும், ஆனாலும் அவனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த அந்தணன் ஒரு நல்லான் (நல்லவன்) என்றும், அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு புரிய வைத்தார்.

எம்பெருமானின் சக்கரம் அருளாழி எனப்படும். நல்லான், அந்த சடலத்தின் அருளாழியையேப் பார்த்தான். இதன் மூலம் அவனுக்கு எம்பெருமான், மீதான அருளின் ஆழமும் தெரிந்தது. தவிர்த்து அன்பு என்பது எதிர்ப்பார்ப்புடன் வருவது. அருள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது. நல்லான் அருளாழ்வம் கொண்டவன். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நல்லான் அருள் நிறைந்த உள்ளதோடு இறுதி சடங்குகளை செய்தான். எனவே, எம்பெருமானின் அருளுக்குப் பாத்திரமானான். ஸ்ரீமன் நாராயணனே “நல்லான்” என்று கூறியதால், அவரை மக்கள் “நல்லான் சக்ரவர்த்தி” என்று அழைத்தனர்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அந்த நல்லானைப் போல நல்லுள்ளம் கொண்டு நான் அருளாழம் கண்டேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆத்ம தேவன் - 2

ஸ்கந்தம் 01

ஸாதுவிடமிருந்து பழத்தைப் பெற்றுக் கொண்ட ஆத்ம தேவனுக்கு ஸந்தோஷம் தாங்கவில்லை. ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தார். பழத்தை மனைவியிடம் கொடுத்து,

“நம் குறையெல்லாம் தீர்ந்தாச்சு. இந்தப் பழத்தை நீயே சாப்பிடு. குழந்தை பிறக்கும்னு அனுக்ரஹம் பண்ணி ஒரு ஸாது கொடுத்தார். “

அவளுக்கு எரிச்சலாக வந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு, பழத்தை வாங்கி ஸ்வாமி இடத்தில் வைத்தாள். குழந்தை பிறந்தால் அழகு போய் விடும் என்பதே அவளது பெரும் கவலை. மேலும் இரவில் குழந்தை அழும். உறக்கம் கெடும். இருக்கும் வரை நன்றாக அனுபவித்து விட்டு ப் போய் விட வேண்டும். குழந்தை எதற்கு?


ஆனால் அதை கணவரிடம் சொல்ல தயக்கமாய் இருந்தது. ஒருவேளை அந்த ஸாதுவின் ப்ரசாதத்தால் குழந்தை வந்து விட்டால் என்ன செய்வது என்று யோசித்தாள்.

கணவனிடம் சென்று, “நமக்கு நல்லபடியாகக் குழந்தை பிறக்கணும்னு வேண்டிக்கிட்டு தீர்த்த யாத்திரை போய் வாங்க. நான் என் அக்காவைக் கூப்பிட்டு உதவிக்கு வெச்சுக்கறேன்“ என்றாள்.

ஆத்ம தேவனும் தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டார். குழந்தை நல்ல குணங்களோடும், மஹாத்மாகவும் விளங்க வேண்டும் என்பதே அவரது பிரார்த்தனை.

அவர் போனதும் துந்துலி தன் சகோதரியை அழைத்தாள்.

அவளிடம் தன் பிரச்சினையைச் சொன்னதும், அவளோ, “துந்துலி, எனக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைங்க இருக்கு. இப்ப வேற மறுபடி உண்டாயிருக்கேன். என் வீட்டிலோ வறுமை. குழந்தைகளை வளர்க்க முடியல. நீ கொஞ்சம் பணம் கொடுத்தா என் வயத்தில இருக்கற குழந்தையை பெத்து உனக்கே தரேன். கொஞ்ச நாள் உன் கூடவே இருந்து வளர்த்தும் கொடுக்கறேன்.“ என்றாள்.

துந்துலிக்கு தன் வயிறு பெரிதாகும் என்று நினைத்தாலே கஷ்டமாக இருந்தது. எனவே, தமக்கையோடு உடன்பட்டாள்.

“சரிக்கா, இந்தப் பழத்தை என்ன பண்றது? “

“கொண்டா“ என்று அதை வாங்கி கழுநீர்த் தொட்டியில் போட்டாள் அக்காள்.

சில மாதங்களில் அக்காவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், ஆச்சரியம் பாருங்கள், அவர்கள் வீட்டிலிருந்த பசு மாடு அன்றே ஒரு மனிதக் குழந்தையை ஈன்றெடுத்தது. ஆனால் அதன் காதுகள் மாட்டின் காதுகள் போல் இருந்தன.

திடீரென்று பசு மாட்டிற்கு மனிதக் குழந்தை பிறந்ததும் திகைத்துப் போனார்கள் சகோதரிகள்.

ஓரிரு நாள்களில் ஆத்ம தேவன் திரும்பி வந்து விட, துந்துலி தன் சகோதரியின் குழந்தையை தன் குழந்தை என்று சொன்னாள்.

ஆனால் அந்தக் குழந்தை களையின்றி விகாரமாய் இருந்தது. பசு மாட்டிற்குப் பிறந்த குழந்தையோ, பார்த்தவுடனேயே மஹாத்மா என்று சொல்லும் படியான ஸாமுத்ரிகா லக்ஷணங்களுடன் விளங்கியது.

பசு மாட்டுற்கு மனிதக் குழந்தை எப்படிப் பிறந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை.

தன் குழந்தைக்கு துந்துகாரி என்றும், பசு ஈன்றெடுத்த குழந்தைக்கு கோகர்ணன் என்றும் பெயரிட்டார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகள் வளர்ந்தன. துந்துகாரி மஹா துஷ்ட ஸ்வபாவம் கொண்டவனாய் இருந்தான். ஸாதுவின் ப்ரசாதமான கோகர்ணன் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து தேஜஸ்வியாக இருந்தான். இயல்பாகவே ஞானியாகவும் இருந்தான். துந்துகாரி வளர வளர கெட்ட பழக்கங்களும் வளர்ந்தன. ஒரு நாள் ஆத்ம தேவனிடம் பணம் கேட்டு தந்தை என்றும் பாராமல் அவரை ஓங்கி ஒரு அறை விட, அவர் வாசலில் வந்து விழுந்தார். வலியால் துடித்த அவரை திண்ணையில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த கோகர்ணன் பார்த்தான்.

அவனிடம், “என் பிள்ளை அடிச்சுட்டான்“ என்றதும், கலகலவென்று சிரித்தான் கோகர்ணன். 

“அப்பா, இன்னும் உங்களுக்கு அஞ்ஞானம் விடலியா? அடிக்கறான். அவனை என் பிள்ளைங்கறீங்க. இவன் கர்மா செய்தா நீங்க நரக வாசத்திலேர்ந்து தப்பிக்க போறீங்க? அன்னிக்கே அந்த ஸாது சொன்னார் ஸன்யாஸே ஸர்வதா சுகம்னு. பகவானை தேடுங்கப்பா. இவ்வளவு கஷ்டப்பட்டப்றமும் கூட இந்த ஸம்ஸாரம் இனிக்கறதா?“ என்று கேட்டான்.

ஆத்ம தேவன் அந்த ஸாதுவே, குருவாக கோகர்ணனின் உருவில் வந்தாரோ என்று நினைத்தான். அக்கணமே வீட்டைத் துறந்து கிளம்பினான். தனக்கு ஆதரவாய் இருந்த ஆத்ம தேவன் கிளம்பியதும் கோகர்ணனும் தீர்த்த யாத்திரை கிளம்பினார்.

துந்துகாரி பணத்திற்காக வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டான். தட்டிக் கேட்ட தாயான துந்துலியை அடித்தே கொன்று விட்டான். பின்னர், சில பெண்களை அழைத்து வந்து உல்லாஸ வாழ்க்கை நடத்தத் துவங்கினான். அவர்களை சந்தோஷப்படுத்த அவன் ஏராளமான பொருளைக் கொள்ளை அடிக்க, அந்தப் பெண்களுக்கு ராஜ தண்டனை வருமோ என்று பயமேற்பட்டது. அவர்கள் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு நாள் இரவு துந்துகாரியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு ஓடி விட்டனர்.

துந்துகாரி தான் செய்த பாவங்களின் விளைவால் துர்மரணம் ஏற்பட்டு, பித்ரு லோகத்தை அடைய முடியாமல், ப்ரும்ம ராக்ஷஸாக மாறி அந்த வீட்டிலேயே இருக்கத் துவங்கினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Tuesday, 24 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 65

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 35

அச்யுத: ப்ரதி²த: ப்ராண: 
ப்ராணதோ³ வாஸவாநுஜ:|
அபாம் நிதி⁴ர் அதி⁴ஷ்டாநம் 
அப்ரமத்த: ப்ரதிஷ்டி²த:||

  • 319. அச்யுதஃ - நழுவாதவன்.
  • 320. ப்ரதிதஃ - புகழ்பெற்றவன்.
  • 321. ப்ராணஃ - உயிரானவன்.
  • 322.  ப்ராணதோ³ - 
  • 323. வாஸவாநுஜஹ - இந்திரனுக்குப் பின் பிறந்தவன்.
  • 324. அபாம் நிதி⁴ர் - கடல்களுக்கு ஆதாரமானவன்.
  • 325. அதி⁴ஷ்டாநம் - ஆசனமாக இருந்தவன்.
  • 326. அப்ரமத்தஃ - ஊக்கம் உடையவன், விழிப்புடையவன்.
  • 327. ப்ரதிஷ்டி²தஹ - நிலை பெற்றவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.2 

ஸ்ரீ ப⁴க³வாநுவாச।
குதஸ் த்வா கஸ்²மலமித³ம் 
விஷமே ஸமு பஸ்தி²தம்| 
அநார் யஜுஷ்டமஸ் வர்க்³யம்
அகீர்தி கரமர்ஜுந||

  • ஸ்ரீ ப⁴க³வான் உவாச - புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்
  • குதஸ் - எங்கிருந்து 
  • த்வா - உன்னிடம் 
  • கஸ்²மலம் - அழுக்கு 
  • இத³ம் - இந்தக் கவலை 
  • விஷமே - இந்த நெருக்கடி நேரத்தில் 
  • ஸமுபஸ்தி²தம் - வந்தது 
  • அநார்ய - வாழ்வின் நோக்கமறியாதோர் 
  • ஜுஷ்டம் - பயிற்சி செய்யப்படும் 
  • அஸ்வர்க்³யம் - மேலுலகங்களுக்கு கொண்டு செல்லாதது 
  • அகீர்த்தி - அவமானம் 
  • கரம் - காரணம் 
  • அர்ஜுந! - அர்ஜுநா

ஸ்ரீ பகவான் கூறுகிறார்: அர்ஜுநா! உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தையே கொடுக்கின்றன. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.34

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.34

பா⁴வயத் யேஷ ஸத்த் வேந 
லோகாந் வை லோக பா⁴வந:|
லீலா வதாரா நுரதோ 
தே³வ திர்யங் நரா தி³ஷு||

  • ஏஷ லோக பா⁴வநஹ - இந்த உலக ரட்சகனான வாஸுதேவன்
  • ஸத்த் வேந - தனது சக்தியால்
  • தே³வ திர்யங் நரா தி³ஷு - தேவன் நரன் மிருகம் முதலியனவாகக் கொண்ட
  • லீலா அவதார அநுரதோ - லீலா அவதாரங்களில் பற்று உடையவராய்
  • லோகாந் வை - உலகம் அனைத்தையும்
  • பாவயதி – ரக்ஷிக்கின்றார்

ஒரே ஒரு பரம்பொருளான பகவான், தனது சத்துவ குணமாகிய சக்தியால் உலக ரட்சகராக விளங்குகிறார். அமரர், மனிதர், விலங்கு முதலிய பற்பல பிறவிகளில் லீலையாக அவதாரம் செய்ய விருப்பம் கொண்டு, உலகமனைத்தையும் காத்து வருகிறார்.

ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில் 
இரண்டாவது அத்யாயம் முற்றிற்று.

||இதி ஶ்ரீமத்³ பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹிதாயாம்||
||ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே த்³விதீயோ அத்⁴யாய:||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - பால காண்டம் அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பால காண்டம் - இளமை மாட்சிமை

பால காண்டம் - 77 - ஸர்க்கங்கள் - 2266 ஸ்லோகங்கள்

தெய்வீக முனிவர் நாரதர், வால்மீகி முனிவருக்கு ஞானம் அளிப்பதற்காகவும், இராமாயணக் காவியத்தை எழுதும் கடமையைப் பற்றி அவருக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் அவரது ஆசிரமத்திற்கு வருகிறார். இந்த இரு முனிவர்களுக்கிடையிலான உரையாடலில், வால்மீகி பூமியில் உள்ள மிகவும் நல்லொழுக்கமுள்ள மனிதரைப் பற்றி நாரதரிடம் இருந்து வெளிப் படுத்துகிறார், அதாவது ராமர். இந்த தொடக்க அத்யாயத்தில், ராம நாரதரை புகழ்ந்து பேசும் போது, ராமாயணத்தின் ஒரு அவுட்லைன் கொடுக்கிறது, இந்த காவியத்தின் முக்கிய அம்சங்களான, நல்லொழுக்கம், தாராள மனப்பான்மை, ஒழுக்கம், கற்பு போன்றவற்றை உண்மையாகவே எடுத்துக்காட்டுகிறது.

வால்மீகி ராமாயணம் காயத்ரி கீதத்தின் இருபத்தி நான்கு எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் ஒவ்வொரு எழுத்தின் தலைப்பின் கீழ் ஆயிரம் வசனங்கள் ஒரு புத்தகமாக அமைக்கப்பட்டன. அந்த வகைப்பாடு அல்லது வசனங்களை ஆயிரம் அத்யாயங்களாகப் பிரிப்பது இப்போது இல்லை என்றாலும், காயத்ரி ராமாயணம் எனப்படும் காயத்ரி கீர்த்தனையின் 24 எழுத்துக்களுடன் அடையாளம் காணப்பட்ட இருபத்தி நான்கு பாடல்கள் கிடைக்கின்றன, அது இந்தப் பக்கத்தின் இறுதிக் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. காயத்ரியின் திட்டத்திற்கு இணங்க, ராமாயணம் முதல் வசனத்தை டா என்ற எழுத்தில் ஒரு நல்ல எழுத்துடன் தொடங்குகிறது.

  • ஸர்க்கம் 1 - நாரத வாக்யம் - 100 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 2 - ப்ரும்மா வருதல் - 43 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 3 - இராம காவியம் பற்றிய கதை சுருக்கம் - 39 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 4 - இராமாயணம் தோன்றியது - 36 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 5 - அயோத்யா வர்ணனை - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 6 - ராஜ வர்ணனை - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 7 - மந்திரிகள் பற்றிய வர்ணனை - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 8 - சுமந்திரன் சொல்லியது - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 9 - ரிஷ்ய ஸ்ருங்க முனிவரின் கதை - 20 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 10 - ரிஷ்ய ஸ்ருங்க முனிவரை வர வழைத்தல் - 33 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 11 - ரிஷ்ய ஸ்ருங்க முனிவர் அயோத்யா வருதல் - 31 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 12 - அஷ்வ மேத ஏற்பாடுகள் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 13 - யக்ஞ சாலா பிரவேசம் - 41 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 14 - அஷ்வ மேதம் - 60 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 15 - ராவணனை வதம் செய்ய உபாயம் தேடுதல் - 34 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 16 - பாயஸ உத்பத்தி - 32 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 17 - கரடி, வானரங்களின் பிறப்பு - 37 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 18 - ராமன் முதலானோர் பிறப்பு - 59 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 19 - விஸ்வாமித்திர வாக்யம் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 20 - தசரதரின் பதில் - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 21 - வசிஷ்டரின் உபதேசம் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 22 - வித்யா புதிய வித்தையை உபதேசித்தல் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 23 - காமா ஸ்ரமம் என்ற இடத்தில் வசித்தல் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 24 - தாடகா வனத்தில் நுழைதல் - 32 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 25 - தாடகையின் கதை - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 26 - தாடகையின் வதம் - 36 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 27 - அஸ்திரங்களை பெறுதல் - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 28 - அஸ்திர ஸம்ஹார க்ரஹணம் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 29 - ஸித்த ஆஸ்ரமம் - 32 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 30 - யாகத்தைக் காத்தல் - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 31 - மிதிலைக்கு புறப்படுதல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 32 - குச நாபர் மகளின் கதை - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 33 - விஸ்வாமித்திர வம்ச வர்ணனை 1 - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 34 - விஸ்வாமித்திர வம்ச வர்ணனை 2 - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 35 - உமா, கங்கையின் கதைகளின் சுருக்கம் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 36 - உமா மாகாத்ம்யம் - 27 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 37 - குமரன் என்ற முருகன் பிறப்பு - 32 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 38 - ஸகர புத்திரன் பிறப்பு - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 39 - பூமியைத் தோண்டுதல் - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 40 - கபிலரைக் காணுதல் - 30 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 41 - ஸகர யக்ஞ சமாப்தி - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 42 - பகீரதனுக்கு வரம் அளித்தல் - 25 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 43 - கங்கை இறங்கி வருதல் - 41 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 44 - ஸகர புத்திரர்களை கரையேற்றுதல் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 45 - அம்ருதம் தோன்றுதல் - 45 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 46 - திதியின் கர்ப்பத்தை அழித்தல் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 47 - விசாலா கமனம் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 48 - இந்திரன் அகல்யை, இவர்களை சபித்தல் - 33 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 49 - அகல்யை சாபத்திலிருந்து விடுபடுதல் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 50 - ஜனகரை சந்தித்தல் - 25 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 51 - விஸ்வாமித்திரரின் கதை - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 52 - வசிஷ்டர் செய்த விருந்து உபசாரம் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 53 - சபலாவை தான் விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக சொல்லுதல் - 25 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 54 - பப்லவர்களை உற்பத்தி செய்தல் - 23 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 55 - விஸ்வாமித்திரரின் வில் வித்தை முதலியன - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 56 - ப்ரும்ம தேஜஸின் பலம் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 57 - திரிசங்குவின் வேண்டுகோள் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 58 - திரிசங்கு பெற்ற சாபம் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 59 - வசிஷ்டரின் பிள்ளைகளை சபித்தல் - 22 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 60 - திரிசங்கு சுவர்கம் - 34 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 61 - சுனசேபன் என்பவனை விற்றல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 62 - அம்பரீஷனின் யாகம் - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 63 - மேனகையை வெளியேற்றுதல் - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 64 - ரம்பையின் சாபம் - 20 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 65 - ப்ரும்ம ரிஷி பதவி பெறுதல் - 40 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 66 - வில்லைப் பற்றிய விவரம் - 26 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 67 - வில்லை உடைத்தல் - 27 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 68 - தசரதரை அழைத்தல் - 19 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 69 - தசரதரும், ஜனகரும் சந்தித்தல் - 19 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 70 - பெண் கேட்டல் - 45 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 71 - கன்யாவை தர சம்மதித்தல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 72 - கோதான மங்களம் காப்பு கட்டுதல் - 25 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 73 - தசரதரின் புத்திரர்களின் விவாகம் - 40 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 74 - ஜமதக்னி மகன் வந்து எதிர்த்தல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 75 - வைஷ்ணவ வில்லின் பெருமை - 28 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 76 - ஜமதக்னி புத்திரரை அடக்குதல் - 24 ஸ்லோகங்கள்
  • ஸர்க்கம் 77 - அயோத்தியில் பிரவேசித்தல் - 29 ஸ்லோகங்கள் 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்