||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 11
அஜஸ் ஸர்வேஸ்²வர: ஸித்³த⁴:
ஸித்³தி⁴: ஸர்வாதி³ ரச்யுத:|
வ்ருஷா கபிர் அமேயாத்மா
ஸர்வ யோக³ விநிஸ் ஸ்ருத:||
- 96. அஜஸ் - தடைகளை விலக்குபவர். பிறக்காதவர். பக்தர்களின் இதயங்களில் நடமாடுபவர். எல்லா ஒலிகளுக்கும் ஆணிவேராக இருப்பவர். பக்தர்களின் இதயங்களிலிருந்து அறியாமையை நீக்குபவர்.
- 97. ஸர்வேஸ்²வரஸ் - தன்னைப் பற்றியவரைத் தானே சென்றடைபவர்.
- 98. ஸித்³த⁴ஸ் - தேடி அலைய வேண்டாதபடித்தானே உபாயமாய் நிற்பவர். முழுமையான சாதனை படைத்தவர்.
- 99. ஸித்³தி⁴ஸ் - அடைய வேண்டிய பேறாக இருப்பவர்.
- 100. ஸர்வாதி³ர் - எல்லாப் பலன்களுக்கும் ஆதிகாரண பூதன்.
முதல் நூறு திரு நாமங்கள் நிறைவு.
- 101. அச்யுதஹ - தன்னைப் பற்றியவரை நழுவ விடாதவர். ஒருபோதும் நழுவாதவர்.
- 102. வ்ருஷா கபிர் - தர்மமே வடிவான மகா வராக அவதாரமானவர். தர்மத்தைப் பாதுகாப்பவர்.
- 103. அமேயாத்மா - அறிய முடியாதவர். அளவிட முடியாதவர்.
- 104. ஸர்வ யோக³ விநிஸ் ஸ்ருதஹ - எல்லா உபாயங்களாலும் அடையத்தக்கவர். எல்லாப் பற்றுகளிலிருந்தும் விடுபட்டவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment