About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 13 September 2025

திவ்ய ப்ரபந்தம் - 121 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 121 - கஞ்சனை மாளப் புரட்டியவன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்

இருட்டிற் பிறந்து போய்* ஏழை வல்ல் ஆயர்* 
மருட்டைத் தவிர்ப்பித்து* வன் கஞ்சன் மாளப் புரட்டி* 
அந்நாள் எங்கள்* பூம்பட்டுக் கொண்ட* 
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • இருட்டில் - இருள் நிறைந்த நடு நிசியில்
  • பிறந்த - மதுரையிலே தேவகீ புத்ரனாகத் தோன்றி
  • போய் - அங்கு நின்றும் அப்போதே ஆய்ப் பாடிக்குப் போய்
  • ஏழை - அவிவேகிகளான
  • வல் - கிருஷ்ண ஆஸ்ரயத்தால் -தன்னைப் பற்றி யிருக்கும் மன வலிமையை யுடைய
  • ஆயர் - இடையர்களின்
  • கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக்
  • கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற
  • மருட்டை - மருள் வார்த்தைகளை
  • தவிர்ப்பித்து - போக்கினவனாயும்
  • வல் கஞ்சன் - கொடிய கம்ஸன்
  • மாள - மாண்டு போம்படி
  • புரட்டி - அவனை மயிரைப் பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப் புரட்டினவனாயும்
  • அந் நாள் - நாங்கள் யமுனையில் நீராடிய அக் காலத்திலே
  • எங்கள் - எங்களுடைய
  • பூம் பட்டு - அழகிய பட்டுப் புடவைகளை
  • கொண்ட - வாரிக் கொண்டு போன
  • அரட்டன் - தீம்பனாயுமுள்ள கண்ணன்
  • வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

இருள் சூழ்ந்த வேளையில் தேவகியின் வயிற்றில் திருவவதரித்து, இரவோடிரவாக ஆயர்பாடிக்குச் சென்று, அங்குள்ள ஆயர்களின் பயத்தைப் போக்கி, கொடியவனான கஞ்சனை அடித்துக் கொன்று, அன்றொரு நாள் யமுனையில் நீராடும் போது எங்களுடைய அழகிய பட்டு சேலைகளை அபகரித்த குறும்பனான கண்ணன், ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment