||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 120 - குழலூதும் வித்தகன்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
காயும் நீர் புக்குக்* கடம்பு ஏறி*
காளியன் தீய பணத்திற்* சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி*
வேயின் குழல் ஊதி* வித்தகனாய் நின்ற*
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்*
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)
- காயும் - கொதிக்கின்ற (காளியனுடைய விஷாக்நியால்)
- நீர் - மடுவின் ஜலத்திலே
- புக்கு - புகுந்து (கலக்கி) (அம் மடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)
- கடம்பு ஏறி - அம் மடுவின் கரையிலிருந்த கடம்ப மரத்தின் மேலேறி
- காளியன் - அந்தக் காளியனுடைய
- தீய பணத்தில் - கொடிய படத்திலே
- சிலம்பு ஆர்க்க - தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த சிலம்பு சப்திக்கும்படி
- பாய்ந்து - குதித்து
- ஆடி - கூத்தாடி (இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)
- வேயின் குழல் ஊதி - மூங்கினாலானாகிய குழலை ஊதி
- வித்தகன் ஆய் நின்ற - இப்படி விஸ்மயநீயனாயிருந்த
- ஆயன் - கண்ண பிரான்
- வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
- அம்மனே - அம்மா!
- அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்
அன்று கொதிக்கும் மடுவின் நீரில் புகுந்து கடம்ப மரத்தின் மேலேறி, காளியன் என்கிற கொடிய பாம்பின் படமெடுத்த தலை மீது குதித்து தன் திருவடியில் அணிந்திருந்த சலங்கைகள் ஓசை எழுப்பும் படி நடனமாடி, குழலிசைத்து அதிசயமாய் நின்றவன், இன்று ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment