||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
037. திருமணிக்கூடம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஏழாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1288 - 1297 - நான்காம் பத்து - ஐந்தாம் திருமொழி
------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
சேராது முன் செய்த தீ வினை பின் செய்ததுவும்*
வாராது இனி நீ மட நெஞ்சே நேராக்*
குருமணிக் கூடத்து ஆனைக் கொம்பு பறித்தானை*
திரு மணிக் கூடத்தானைச் செப்பு*
- மடம் நெஞ்சே – அறியாமையை உடைய எனது மனமே!
- நேரா – எதிர்த்து
- குரு மணி கூடத்து – சிறந்த இரத்தினங்கள் இழைத்துச் செய்யப் பெற்ற கூடத்தில் இருந்த
- ஆனை – குவலயா பீடம் என்னும் பட்டத்து யானையினது
- கொம்பு – தந்தங்களை
- பறித்தானை – வேரோடு பிடுங்கி அதனால் அதனை அடித்து அழித்தவனும்
- திருமணிக்கூடத்தானை – திருமணிக்கூடம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமாகிய திருமாலை
- நீ செப்பு – நீ இடைவிடாது துதி செய்ய உதவுவாய். அவ்வாறு செய்வாயாயின்
- முன்செய்த தீ வினை – நீ முற்பிறப்பில் செய்து சேர்த்து வைத்துள்ள ஸஞ்சிதம் அநப்யுபகத ப்ராப்தம் என்ற இரண்டு வகைப் பாவமும்
- சேராது – தன் பயனை ஊட்டுமாறு உன்னை அணுகாது
- பின்செய்வதுவும் – இனி அபுத்தி பூர்வகமாகச் செய்கின்ற ஆகாம்யம் எனப்படும் பாவமும்
- இனி வாராது – இனிமேல் உன்னை அணுகாது
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment